முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக்கோப்பை கால்பந்து 2-வது கால் இறுதி: பெல்ஜியம் அதிரடியை பிரேசில் சமாளிக்குமா?

வியாழக்கிழமை, 5 ஜூலை 2018      விளையாட்டு
Image Unavailable

கசான் : உலகக்கோப்பை கால்பந்தில் இன்று இரவு 11.30 மணிக்கு நடைபெறும் 2-வது கால்இறுதியில் பிரேசில்- பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.
5 முறை உலகசாம்பியன்

உலகக்கோப்பை கால்பந்தில் இன்று இரவு 11.30 மணிக்கு நடைபெறும் 2-வது கால்இறுதியில் பிரேசில்- பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் திறமை வாய்ந்தவை என்பதால் இந்த ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருக்கும். 5 முறை உலகக்கோப்பையை வென்ற பிரேசில் அணி ‘லீக்’ ஆட்டங்களில் கோஸ்டாரிகாவை 2-0 என்ற கணக்கிலும், செர்பியாவை 2-0 என்ற கோல் கணக்கிலும் வென்றது. சுவிட்சர்லாந்துடன் 1-1 என்ற கணக்கில் ‘டிரா’ செய்தது. 2-வது சுற்றில் மெக்சிகோவை இரண்டு கோல்போட்டு வீழ்த்தியது.

நம்பிக்கை நாயகன்...

பிரேசில் அணி 12-வது முறையாக அரை இறுதியில் நுழையும் ஆர்வத்தில் உள்ளது. நட்சத்திர வீரர் நெய்மர் அணியின் முதுகெலும்பாக இருக்கிறார். கோல் அடித்தும், சக வீரர்கள் கோல் போடவும் அவர் திறமையான முறையில் செயல்பட்டு வருகிறார். இதுதவிர கோட்டினா, தியாகோ சில்வா, ஜேசஸ், வில்லியன் போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர். கடந்த ஆட்டத்தில் காயத்தால் விளையாடாத மார்சிலோ இன்று ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து 7-வது முறை...

தொடர்ந்து 7-வது முறையாக பிரேசில் அணி கால்இறுதியில் ஆடுகிறது. இதில் 2006-ல் பிரான்சிடமும், 2010-ல் நெதர்லாந்திடம் தோற்று அரை இறுதி வாய்ப்பை இழந்தது. மேலும் கடந்த 3 உலககோப்பையில் ஐரோப்பிய அணியிடம் தோற்று வெளியேற்றப்பட்டு இருக்கிறது. கடந்த உலக கோப்பையில் அரை இறுதியில் ஜெர்மனியிடம் மோசமாக தோற்று வெளியேற்றப்பட்டது. இதனால் ஐரோப்பிய கண்டத்தில் தற்போது பலம் பொருந்திய அணியாக திகழும் பெல்ஜியத்துடன் மிகவும் கவனமாக விளையாட வேண்டும். பெல்ஜியம் அதிரடியை சமாளிப்பது சவாலானது.

சவாலாக இருப்பர்...

பெல்ஜியம் இந்தப் போட்டி தொடரில் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறது. அந்த அணி ‘லீக்’ ஆட்டங்களில் பனாமா (3-0), துனிசியா (5-2), இங்கிலாந்து (1-0) ஆகிய அணிகளை வென்று இருந்தது. 2-வது சுற்றில் ஜப்பானை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் பெல்ஜியம் 2 கோல் வாங்கி பின்தங்கி இருந்த நிலையில் 3 கோல் போட்டு முத்திரை பதித்தது. பெல்ஜியம் அணியில் கேப்டன் ஹசாட், லுகாகு போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். இருவரும் சிறந்த முன்னாள் வீரர்கள். பிரேசில் பின்கள வீரர்களுக்கு அவர்கள் சவாலாக இருப்பார்கள்.

விறு விறுப்பாக ...

2-வது முறையாக அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் பெல்ஜியம் உள்ளது. கடந்த உலக கோப்பையில் அந்த அணி கால்இறுதியில் அர்ஜென்டினாவிடம் தோற்று இருந்தது. இரு அணிகளும் 4 முறை மோதியுள்ளன. இதில் பிரேசில் 3 ஆட்டத்திலும், பெல்ஜியம் 1 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. உலக கோப்பையில் ஒருமுறை மோதியுள்ளன. 2002-ம் அண்டு நடந்த போட்டியில் பிரேசில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இருந்தது. தற்போது உள்ள பெல்ஜியம் அணி பலம் பொருந்தியதாக இருப்பதால் இந்த ஆட்டம் விறு விறுப்பாக இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து