முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு மட்டுமே உண்டு சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

வெள்ளிக்கிழமை, 6 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: வழக்குகளை எந்தெந்த அமர்வுக்கு ஒதுக்கீடு செய்வது என்பதை முடிவெடுக்கும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு மட்டுமே உள்ளது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

வழக்குகளை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக விதிமுறைகளை உருவாக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கன்வில்கர் மற்றும் டி.ஓய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்ரீம் கோர்ட் சுமூகமாக நடைபெறவும், வழக்குகள் உரிய நேரத்தில் விசாரிக்கப்படவும் தலைமை நீதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமை எனக் கூறி பொதுநல மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இதே போன்ற மற்றொரு வழக்கை மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷணும் தாக்கல் செய்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரிக்க கூடாது, மற்ற மூத்த நீதிபதிகள் அமர்வு விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த வழக்கை நீதிபதி ஏ.கே சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கி அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட் வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் தார்மீக அதிகாரம் தலைமை நீதிபதிக்கே உண்டு, இதில் எந்த மாற்று முறையும் செய்ய இயலாது, மூத்த நீதிபதி என்ற அடிப்படையில் இது அவரின் அதிகாரம் என உத்தரவிட்டனர். சுப்ரீம் கோர்ட்டில் அனைத்து அதிகாரமும் பொருந்தியவர் தலைமை நீதிபதிதான். எந்த வழக்கை எந்த நீதிபதி விசாரிப்பது என்பதை தலைமை நீதிபதி மட்டுமே முடிவு செய்வார். இந்த முறை தொடரும்.

வழக்குகளுக்காக கொலிஜியம் தினமும் ஒதுக்கீடு செய்தால் பணிச்சுமை மேலும் அதிகரிக்கும். நீதித்துறையில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கத்தக்கதாக இருந்தாலும், அதை எந்த அளவில் மேற்கொள்வது என்பதை தலைமை நீதிபதி மட்டுமே முடிவு செய்ய முடியும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து