மல்லையா சொத்துகளை விற்று பணத்தை மீட்டது எஸ்.பி.ஐ. வங்கி

வெள்ளிக்கிழமை, 6 ஜூலை 2018      உலகம்
vijay mallaya arrest(N)

லண்டன்: இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி மோசடி செய்த விவகாரம் தொடர்பான வழக்கில், லண்டனில் உள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா சொத்துகளை பறிமுதல் செய்ய பிரிட்டன் உயர் நீதிமன்றம் அனுமதியளித்ததையடுத்து மல்லையாவின் சொத்துக்களை விற்று பணத்தை மீட்டது எஸ்.பி.ஐ. வங்கி.

பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட இந்திய வங்கிகளில் விஜய் மல்லையாவின் கிங் பிஷர் நிறுவனம் ரூ.9,000 கோடி கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தவில்லை. இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த வேளையில், நாட்டை விட்டு வெளியேறி, பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு விஜய் மல்லையா சென்று விட்டார்.

இந்நிலையில், விஜய் மல்லையாவின் சொத்துகளை பறிமுதல் செய்யும்படி பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் இந்திய வங்கிகள் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில், பிரிட்டன் உயர் நீதிமன்றம் கடந்த 26-ம் தேதி உத்தரவு வெளியிட்டது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

லண்டன் அருகே ஹெர்ட்போர்ட்ஷைரில் விஜய் மல்லையா தங்கியிருக்கும் லேடிவால்க் அண்ட் பிராம்பிள் லாட்ஜ் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தவும், மல்லையாவுக்கு சொந்தமான பொருள்களை கையகப்படுத்தவும் பிரிட்டன் உயர் நீதிமன்ற சட்ட அமலாக்க அதிகாரிக்கும், அமலாக்கத் துறை ஏஜெண்டுகளுக்கும் அனுமதியளிக்கப்படுகிறது. அவசியம் ஏற்பட்டால், மல்லையா தங்கியிருக்கும் பகுதிக்குள் செல்வதற்கு போலீஸாரை பயன்படுத்துவதற்கும், பிரிட்டன் உயர் நீதிமன்ற சட்ட அமலாக்கத்துறை அதிகாரி மற்றும் அவரது கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் அமலாக்கத் துறை ஏஜெண்டுகளுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு அனுமதி கோரி, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மல்லையா மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் மல்லையாவின் சொத்துக்களை விற்று பணத்தை எஸ்.பி.ஐ. வங்கி மீட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து