முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்கி அரசுக்கு வருவாய் ஈட்டலாம் மத்திய சட்ட ஆணையம் பரிந்துரை

வெள்ளிக்கிழமை, 6 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: இந்தியாவில் சூதாட்டத்தை சட்டபூர்வமாக்கி விடலாம் என மத்திய சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது. பல கோடி ரூபாய் புரளும் சூதாட்டத்தை தடுக்க முடியாத நிலையில் அதனை சட்டபூர்வமாக்கி வரி விதித்து அதன் மூலம் அரசு வருவாய் ஈட்டலாம் எனவும் பரிந்துரைத்துள்ளது.

மத்திய சட்ட ஆணையம் குழு ஒன்று சூதாட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை ஒன்றை அனுப்பியுள்ளது. அதன்படி, இந்தியாவில் சட்டவிரோதமாக நடக்கும் சூதாட்டங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கி விடலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நீதிபதி சவுகான் தலைமையிலான இந்த ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் மகாபாரத காலம் தொட்டே சூதாட்டங்கள் நடந்துள்ளதாக தெரிகிறது. இதுமட்டுமின்றி பல்வேறு காலங்களிலும் சூதாட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. சூதாட்டத்தை நம் நாடு தடை செய்துள்ள போதிலும், வெளியில் தெரியாமல் நடைபெறும் இந்த சூதாட்டத்தில் பல கோடி ரூபாய் பணம் கை மாறுகிறது.

இதன் மூலம் சட்டவிரோத பணிபரிமாற்றம், போதைப் பொருள் கடத்தல், தீவிரவாதம் உள்ளிட்டவை வளர்ச்சி அடைகின்றன. இதனை கட்டுப்படுத்த எவ்வளவோ நடவடிக்கை எடுத்து வருகின்ற போதிலும் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் சட்டவிரோத கும்பல்கள் மட்டுமே பணம் சம்பாதிக்கின்றன. எனவே இந்த சூதாட்டத்தை சட்டபூர்வமாக அறிவிக்க வேண்டும்.

சூதாட்டத்திற்கான விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். பான் எண், ஆதார் எண் உள்ளிட்டற்றை கட்டாயமாக்கலாம். பண பரிவர்த்தனையை ஆன்லைன் மூலம் மட்டுமே மேற்கொள்ள அனுமதிக்கலாம். மேலும் சூதாட்டத்திற்கு வருமான வரி, சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கலாம். இதன் மூலம் அரசிற்கு வருவாயும் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த வரி வருவாயை பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தலாம்.

சரியான சூதாட்டம், சிறிய சூதாட்டம் என இரண்டு வகையாக இதனை வகைப்படுத்தலாம். சரியான சூதாட்டம் உயர் வருவாய் பிரிவினருக்கும் சிறிய சூதாட்டம், குறைந்த வருவாய் பிரிவினருக்கும் பரிந்துரைக்கலாம் என சட்ட ஆணையம் கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து