முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோலியப் பொருட்கள் படிப்படியாக ஜி.எஸ்.டி. வரம்பில் கொண்டு வரப்படும் நிதித்துறை செயலர் தகவல்

வெள்ளிக்கிழமை, 6 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: பெட்ரோலியப் பொருள்கள் படிப்படியாக ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரப்படும் என்று நிதித்துறை செயலா் ஹஷ்முக் அதியா தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நிதித்துறை செயலர் ஹஷ்முக் அதியா இது தொடா்பாக கூறியதாவது,
தற்போது பெட்ரோல், டீசல், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, விமான எரிபொருள் ஆகியவை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் இல்லை. இப்போது அவற்றை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மத்திய அரசு இதனை பரிசீலித்து வருகிறது. படிப்படியாகவே பெட்ரோலியப் பொருள்கள் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரப்படும்.

பெட்ரோலியப் பொருள்களுக்கு இப்போதைய வரி விதிப்பு முறையே சிறப்பாக உள்ளது என்பதால் அதனை மாற்றவில்லை. அரசு வரி வருவாயில் கூடுதல் கவனம் செலுத்துவது நாட்டு நலன் கருதிதான். வரி வருவாய் மூலம்தான் ஏழை மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து