முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

வெள்ளிக்கிழமை, 6 ஜூலை 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - திண்டுக்கல் அருகிலுள்ள தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திண்டுக்கல் அருகிலுள்ள தாடிக்கொம்பு சௌந்தரராஜா பெருமாள் கோவிலில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் தேய்பிறை அஷ்டமி பூஜையின் போது திண்டுக்கல், திருப்பூர், கோவை, தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டு வருகின்றனர். இங்குள்ள சொர்ண ஆகர்சன பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி நாளில் 6 கால பூஜைகள் நடைபெறும். அதன்படி நேற்று சொர்ண ஆகர்சன பைரவருக்கு பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட பால், பழம், பன்னீர், இளஞிர், சந்தனம், செவ்வரளி மலர்கள் உள்ளிட்ட 16 வகை பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து பைரவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். மேலும் உற்சவர் மூர்த்திகளான சௌந்தர்ராஜ பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி, தாயார் சந்நிதி, சக்கரத்தாழ்வார், நரசிம்மர், தன்வந்திரி, வேணுகோபால், ரதி, மன்மதன் உள்ளிட்ட சந்நிதிகளலும் வழிபாடு நடத்தினர். சொர்ண ஆகர்சன பைரவருக்கு பூசணி மற்றும் தேங்காயில் நெய் தீபமேற்றி வழிபட்டனர். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து