முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீவி. “கலசலிங்கம் ஐஏஎஸ் அகாடமி “ பல்கலை துணைத்தலைவர் முனைவர் எஸ். சசிஆனந்த் தகவல்

வெள்ளிக்கிழமை, 6 ஜூலை 2018      விருதுநகர்
Image Unavailable

ஸ்ரீவி.  கலசலிங்கம் பல்கலையில்,   சேர்ந்து படிக்கும்  பி. டெக்,  பி எஸ் சி, வேளாண்மை,  தோட்டக்கலை,  பி. ஏ  மாணவர்களுக்கு  பாடப்பிரிவுகளோடு  மாணவர்கள் முழு  தொழி;ற்சாலை பொறியாளர்களாகவும்,  அரசு  நிர்வாகத்தில்  சிறந்த பொறுப்பை வைப்பவர்களாகவும்,  சுயதொழிற் முனைபவர்களாகவும்  பணியில்  சேருவதற்க்காகவும் பல  முயற்சிகள் எடுத்து  பல திட்டங்கள்  உருவாக்கப்பட்டு   திறம்பட  கடந்த  20 ஆண்டு காலமாக  நடத்தி  வெற்றி கிடை;த்துள்ளன என்றார்.
நேர்காணலை எதிர்கொள்ள,  “சாப்ட்ஸ்கில்ஸ் “பயிற்சி,  வங்கிகளில்  சேருவதற்க்கான  வங்கித்தேர்வு பயிற்சிகள்,  “மத்திய  அரசு  சுயதொழிற்  மையம்”; நிறுவப்பட்டு  அதன்மூலம் மாணவர்களுக்கு  சுயதொழிற் துவங்குவதற்க்கான   பொருள்களை  உற்பத்தி செய்து   காப்புரிமை கழகத்திற்;க்கு  பதிவுசெய்து   காப்புரிமை பெற்று  நிதியும்  பெற்றுத்தருகிறார்கள்.
மேலும்,  அரசு  நிர்வாகத்தில்  சிறந்த  பொறுப்பில் சேர்வதற்க்கு  நடைபெறும் அரசு  பொதுத்தேர்வுக்கு  திறமைமிக்க  வல்லுநர்களால் பயிற்ச்சி வழங்கப்பட்டு  இதுவரை  ஒவ்வொரு ஆண்டும் 100 விழுக்காடு மாணவர்கள் பயனடைந்து வெற்றி பெற்று வருகிறார்கள்.
இதற்க்கும் மேலாக  மாணவர்களை  ஐ ஏ எஸ் தேர்வில் வெற்றிபெற்று  கிராமப்புற மாணவர்களுக்கு  எட்டாக்கனியாக இருக்கும் ஐ ஏ எஸ் பொறுப்பை பெற்றிடும் பயிற்சிகளை வழங்குவதற்க்காக  “கலசலிங்கம்  ஐ ஏ எஸ்  அகாடமி”   2012ம் ஆண்டு சொக்கலிங்கம் ஐ ஏ எஸ் அவர்களால்  துவக்கப்பட்டு  பயிற்சிகள்  வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த  ஐ ஏ எஸ் அகாடமி மூலம் ஒவ்வொரு ஆண்டும்  23 முதல்  30 மாணவர்கள்  எழுத்து தேர்வில் வெற்றி பெற்று  பிரிலிமெரி  தேர்வில்  தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.  இந்த அகாடமியில்  பல்கலை கழக மாணவர்களைத்தவிர  பல்கலை  வளாகத்தில் உள்ள  அனைத்து கல்லூரி மாணவர்களும்   தமிழக மற்ற கல்லூரி மாணவர்களும்  சேர்ந்து   தினமும் பயிற்சி பெற்று  வருகிறார்கள்..
குறிப்பாக   தற்பொழுது  துவக்கப்பட்டுள்ள  பி. எஸ். சி,  வேளாண்மை  மற்றும் தோட்டக்கலை மாணவர்களுக்கு மிகவும்  பயனுள்ளதாக இந்த   மையத்தில்,  அனைத்து  வகையான  “ ஊக்க மூட்டும்  பயிற்சிகளை”  நடத்தி   ஐ ஏ எஸ்,  குரூப் 1,  குரூப் 2, தேர்வுக்குத்  தயார்  படுத்துகிறோம்.
மேலும்,  இந்த  கலசலிங்கம்  ஐ ஏ எஸ் அகாடமியில் பிரத்யோக  நூலகம்  3000க்கும் மேற்பட்ட  ஐ ஏ எஸ்  பயிற்சி புத்தகங்களுடன் ,  3500 குறுந்தகடுகள்,  4000  படக்குறுந் தகடுகள்  அமைக்கப்பட்டுள்ளன.
மேலும்,  அகாடமி மையத்தில் உள்ள  ஒலி ஒளி காட்சி  கூடம்  (வீடியோ  கான்பிரன்ஸ் ஹால்) சிறந்த முறையில் பயன்படுத்தப்பட்டு தினமும்  நான்கு  முதல் ஐந்து  ஐ ஏ  எஸ்,  ஐ பி எஸ் அதிகாரிகள்  பயிற்சி  வழங்குவதால்  மாணவர்கள்  தங்களுடைய   முழு பெர்சனாலட்டி திறமையை வெளிக்கொணர்ந்து  “தம்மால் முடியும்”,   என்ற  நம்பிக்கையும் பெற்று  பயிற்சிகள் வழங்குவதில்  கலசலிங்கம் பல்கலைகழகத்துக்கு நிகர்  வேறு  எந்த  மையமும் இல்லை  என்பது திண்ணம்.  என்று   துணைத்தலைவர் தம் அறி;க்கையில்  கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து