சீனா மீதான அமெரிக்க கூடுதல் வரிகள் அமலுக்கு வந்தன

சனிக்கிழமை, 7 ஜூலை 2018      உலகம்
CHINA THINGS 2018 04 03

பெய்ஜிங்: வரலாற்றின் மிகப் பெரிய பொருளாதாரப் போரை ஏற்படுத்தக் கூடியதாகக் கருதப்படும் சீன பொருள்கள் மீதான அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கூடுதல் வரிகள் அமலுக்கு வந்தன.

சீனாவும், அந்தக் கூடுதல் வரிகளுக்கு பதிலடியான தங்களது நடவடிக்கைகளும் உடனடியாக செயல்பாட்டுக்கு வருவதாக அறிவித்துள்ளது.

சீனாவில் தயாரிக்கப்பட்ட 3,400 கோடி டாலர் இயந்திரப் பொருள்கள், மின்சாதனங்கள், வாகனங்கள், கணினி உதிரி பாகங்கள் உள்ளிட்ட உயர் தொழில் நுட்பப் பொருள்களுக்கு 25 சதவீத கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.

அந்த வரிவிதிப்புகள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தன.

இந்தச் சூழலில், தங்களது பொருள்கள் மீதான கூடுதல் வரிவிதிப்புக்கு பதிலடியாக தாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளும் உடனடியாக அமலுக்கு வருவதாக சீனா அறிவித்துள்ளது. அமலாகியுள்ள இந்த அமெரிக்க கூடுதல் வரி விதிப்பு, மிகப் பெரிய பொருளாதாரப் போருக்குக் காரணமாக அமையக்கூடிய ஆரம்பக் கட்ட சிறு மோதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து