முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாஸ்போர்ட் வழங்குவதில் தாமதம்: மண்டல அலுவலகத்துக்கு சுஷ்மா கண்டனம்

சனிக்கிழமை, 7 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: பாஸ்போர்ட் வழங்குவதை தாமதப்படுத்துவதாக பெண் ஒருவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, டெல்லி பாஸ்போர்ட் மண்டல அலுவலகத்துக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பெண் ஒருவர் தனது சுட்டுரைப் பக்கம் மூலம் சுஷ்மா ஸ்வராஜுக்கும், கனடாவின் வான்கூவரில் உள்ள இந்தியத் தூதரகம், டெல்லியில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கும் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் உள்ள எனது மகளை கனடாவுக்கு அழைத்து வர வேண்டும். அவரது விசா காலம் விரைவில் முடிவடைய உள்ளது. அவருக்கு பாஸ்போர்ட் பெறுவற்காக, டெல்லியில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தேன். மூன்று மாதங்களாகியும் எந்த தகவலும் வராததால், பாஸ்போர்ட் அலுவலகத்தை கடந்த மாதம் தொடர்பு கொண்டு கேட்டேன்.

அதற்கு, காவல் துறை சரிபார்ப்பு பணி நடைபெற்று வருவதாக அலுவலகத்தில் இருந்து பதில் வந்தது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன் அந்த அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, அதே நிலை நீடிக்கிறது' என்று பதில் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, டெல்லி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு கண்டனம் தெரிவித்து சுஷ்மா ஸ்வராஜ் தனது சுட்டுரைப் பக்கத்தில்  பதிவொன்றை வெளியிட்டார். பாஸ்போர்ட் விண்ணப்பதாரருக்கு, அதே நிலை நீடிக்கிறது'' என்று பதில் அளிக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, அந்த விண்ணப்பம், சரிபார்ப்பு பணிக்காக, வான்கூவரில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று அந்த பாஸ்போர்ட் அலுவலகம்  பதிலளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து