முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோனிக்கு பிறந்த நாள்: ரசிகர்கள் வாழ்த்து

சனிக்கிழமை, 7 ஜூலை 2018      விளையாட்டு
Image Unavailable

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும் நட்சத்திர பேட்ஸ்மேன்களில் ஒருவருமான டோனி நேற்று தனது 37-வது பிறந்த நாளை கொண்டாடினார். தற்போது, இங்கிலாந்தில் இந்திய அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருவதால், இங்கிலாந்தில் உள்ள டோனி, அங்கு கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

டோனியின் மனைவி சாக்‌ஷி தனது கணவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, கேக் வெட்டி கொண்டாடிய பின்னர் எடுத்த புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதேபோல், சக வீரரான சுரேஷ் ரெய்னாவும், டோனிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து பிறந்த நாள் கொண்டாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

அதேபோல், சேவாக் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.  சமூக வலைதளங்களில் #HappyBirthdayMSDhoni  என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ரசிகர்கள் டோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை பகிர்ந்தனர். 2004 -ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான டோனி, அனைத்து விதமான போட்டிகளையும் சேர்த்து மொத்தம் 500 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் வாரியம் நடத்தும் மூன்று வித தொடர்களிலும் கோப்பையை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை டோனி தன்வசம் வைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து