முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது டி-20 கிரிக்கெட் போட்டி: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இங்கிலாந்து

சனிக்கிழமை, 7 ஜூலை 2018      விளையாட்டு
Image Unavailable

கார்டிஃப் : கார்டிஃபில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் ஹேல்ஸ் அதிரடியால் இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இங்கிலாந்து அணி.

பந்துவீச்சு தேர்வு...

இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி கார்டிஃபில் நடந்தது. இந்த போட்டியில் இங்கிலந்து அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியின் சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். ரோகித் சர்மா 5 ரன்களிலும், ஷிகர் தவான் 10 ரன்களிலும், லோகேஷ் ராகுல் 6 ரன்களிலும் வெளியேறினர். இதனால் இந்தியா 3 விக்கெட்டுக்கு 22 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

கோலி 47 ரன்...

அடுத்து இறங்கிய கேப்டன் விராட் கோலியும், சுரேஷ் ரெய்னாவும் நிதானமாக ஆடினர். அணியின் எண்ணிக்கை 79 ஆக இருக்கும்போது சுரேஷ் ரெய்னா 27 ரன்னில் அவுட்டானார். அடுத்து கோலியுடன் டோனி சேர்ந்தார். கோலி 38 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில், இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்  விக்கெட் இழப்புக்கு  ரன்கள் எடுத்துள்ளது. தோனி ரன்களும், பாண்ட்யா ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இங்கிலாந்து அணி சார்பில் ஜேக் பால், பிளங்கட், அடில் ரஷித் ஆகியோர் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

149 ரன் இலக்கு...

இதையடுத்து, 149 ரன்களை இலக்காக கொண்டு இங்கிலந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் இறங்கினர். உமேஷ் யாதவ் தனது சிறப்பான பந்து வீச்சால் தொடக்க ஆட்டக்க்காரர்களை வெளியேற்றினார். ராய் 15 ரன்னிலும், பட்லர் 14 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய ஜோ ரூட் 9 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து ஆடிய அலெக்ஸ் ஹேல்ஸ் ஒருபுறம் நிதானமாக ஆடினார். அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இங்கிலாந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இங்கிலாந்து அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹேல்ஸ் 41 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து டி 20 தொடர் 1-1 சமனிலையில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து