முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மா அரசின் சாதனைகளை விளக்கி கிராமம் கிராமமாக வேன் பிரச்சாரம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்:

சனிக்கிழமை, 7 ஜூலை 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- அம்மா அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கி கழக அம்மா பேரவை சார்;பில் கிராமம் கிராமமாக நடைபெறவுள்ள வேன் பிரச்சார பயணத்தை கழக அம்மா பேரவைச் செயலாளரும்,தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அம்மா அரசின் ஓராண்டு சாதனைகளை மக்களுக்கு விளக்கிடும் வகையிலும் எதிர்கட்சிகளின் பொய்ப் பிரச்சாரங்களை முறியடித்திடும் வகையிலும் கழக அம்மா பேரவை சார்பில் கிராமம் கிராமமாக நடைபெறவுள்ள வேன் பிரச்சார பயணத்தின் தொடக்க விழா நேற்று காலை திருமங்கலம் பயணியர் மாளிகையில் சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவில் கழக அம்மா பேரவைச் செயலாளரும் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு அம்மா அரசின் ஓராண்டு சாதனை விளக்க வேன் பிரச்சார பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.மதுரை மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் கிராமம் கிராமமாகச் சென்றிடும் இந்த வேனில் தலைமை கழக பேச்சாளர்கள் மதுரை தமிழரசன்,டாக்டர்.மணிமுரசு ஆகியோர் தமிழக அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி எதிர்கட்சியினரின் பொய்ப் பிரச்சாரங்களுக்கு பதிலடி கொடுத்து பிரச்சாரம் செய்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் கழக சிறுபான்மை பிரிவு பொருளாளர் ஜான்மகேந்திரன்,மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட சார்புஅணி நிர்வாகிகள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி,திருமங்கலம் நகர் கழகச் செயலாளர் ஜே.டி.விஜயன்,ஒன்றிய செயலாளர்கள் மகாலிங்கம்,அன்பழகன்,ராமசாமி,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,கட்சி நிர்வாகிகள் ஜஹாங்கீர்,சதீஸ்சண்முகம்,கபிகாசிமாயன்,செல்வம்,பழனிச்சாமி,பாலசுப்பிரமணியன்,நெடுமாறன்,பழனிச்செல்வி ராமகிருஷ்ணன்,கணபதிபட்டர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து