அமெரிக்காவில் இந்திய மாணவர் மர்ம நபரால் சுட்டுக் கொலை சிறிது நேரத்தில் குவிந்த நிதியுதவி

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜூலை 2018      உலகம்
Indian studen 2018 07 08

வாஷிங்டன்: அமெரிக்காவின் மிசோரி பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய மாணவர் ஒருவர் ஓட்டலில் நடந்த கொள்ளை சம்பவத்தின் போது, அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடலை இந்தியா கொண்டு செல்வதற்காக நிதியுதவி கேட்டு கோபன்ட்மி எனும் இணையதள கணக்கை அவரது உறவினர் உருவாக்கினார். இந்தக் கணக்கில் 3 மணிநேரத்தில் 25 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி குவிந்தன.

இந்த மாணவர் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சரத் கொப்பு என்பது தெரியவந்தது. மென்பொருள் பொறியாளரான சரத் கொப்பு, மிசோரி மாநிலம், கனாஸ் சிட்டியில் உள்ள மசோரி பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். சரத் கொப்பு படித்துக் கொண்டே, அங்குள்ள ஜேபிஷ் அன்ட் சிக்கன் மார்க்டெ எனும் ஓட்டலில் பகுதிநேரமாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை வழக்கம் போல் ஓட்டலுக்கு சென்ற சரத் கொப்புவை அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டு தப்பி விட்டார். இதையடுத்து, உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சரத் கொப்பு, சிகிச்சை பலன் அளிக்காமல் மரணமடைந்தார்.

இதுகுறித்து கனாஸ்சிட்டி போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் வந்து, ஓட்டலில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் பிரவுன் கலரின் வெள்ளை கோடிட்ட சட்டை அணிந்த நபர் சரத் கொப்புவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் செல்வது பதிவாகியுள்ளது.

இதற்கிடையே சரத் கொப்புவை சுட்டவர் குறித்து அடையாளம் கூறுவோருக்கு 10 ஆயிரம் டாலர் பரிசு அளிக்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் வாராங்கல் நகரைச் சேர்ந்தவர் சரத் கொப்பு. ஐதராபாத்தில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் சரத் கொப்பு பணியாற்றி வந்தார். அமெரிக்கவில் உயர்கல்வி பயில்வதற்காக வந்திருந்தார். சரத் கொப்புவின் தந்தை ராம் மோகன், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

துப்பாக்கிச்சூட்டில் பலியான சரத் கொப்புவின் உறவினர், சரத்கொப்புவின் உடலை இந்தியா கொண்டு செல்வதற்காக நிதியுதவி கேட்டு கோபன்ட்மி எனும் இணையதள கணக்கை உருவாக்கினார். இந்தக் கணக்கில் 3 மணிநேரத்தில் 25 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி குவிந்தன.

Easy, Simple Rangoli Designs for Beginners | 7 Beautiful Rangoli design for festivals | LGArts - 2

Great Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil

சுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways

Easy 30 minutes Milk kova recipe in Tamil | Milk kova seivathu eppadi | Paalkova recipe in Tamil

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து