முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.விற்காக உழைக்கும் இளைஞர்கள் ஒரு போதும் வீண்போக மாட்டார்கள் கிரம்மர் சுரேஷ் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜூலை 2018      மதுரை
Image Unavailable

 மதுரை, - அ.தி.மு.க.விற்காக உழைக்கும் இளைஞர்கள் ஒருபோதும் வீண்போகமாட்டார்கள் என்று மதுரை கரிமேட்டில் நடந்த உறுப்பினர் சேர்க்கும் முகாமில் எம்.ஜி.ஆர்.இளைஞரணி மாநில இணை செயலாளர் கிரம்மர் சுரேஷ் பேசினார்.
மதுரை கரிமேட்டில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் புதிய உறுப்பினர்கள்  சேர்க்கும் முகாம் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சோலை ராஜா தலைமையில் நடைபெற்றது. முகாமில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, எம்.ஜி.ஆர்.இளைஞரணி மாநில இணை செயலாளர் கிரம்மர் சுரேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இதை தொடர்ந்து ஏராளமான இளைஞர்கள் அ.தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களாக இணைந்தனர்.
இந்த முகாமில் எம்.ஜி.ஆர்.இளைஞரணி மாநில இணை செயலாளர் கிரம்மர் சுரேஷ் பேசியதாவது:-
இளைஞர் பருவம் என்பது சிந்திக்கக்கூடிய பருவம் என்பதை விட விரைந்து செயல்படக்கூடிய பருவம் ஆகும். எதையும் எதிர்பாராமல் தான் கொண்ட நோக்கத்தை நிறைவேற்றுகின்ற செயல் வடிவம் இளைஞர் சமுதாயத்திற்கு கிடைக்கப்பெற்ற வரமாகும். அப்படிப்பட்ட இளைஞர்கள் தங்களது எதிர்காலத்தை பாதுக்காக்கின்ற வகையில் அ.தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களாக ஆர்வத்துடன் சேர்ந்து வருகிறார்கள். இந்த இயக்கத்திற்காக உழைப்பவர்கள் ஒரு போதும் வீண்போகமாட்டார்கள் என்பதற்கு உதாரணம் உங்கள் மத்தியில் நிற்கின்ற நான் தான்.
எனக்கு தாயும், தந்தையுமாக இருந்து எனது அரசியல் வழிகாட்டியாக இருந்து வரும் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அ.தி.மு.க.வில் இளைஞர்களை ஊக்குவிப்பதில் மாபெரும் சக்தியாக திகழ்கிறார். உறக்கத்தையும், உணவையும் மறந்து உழைக்கக்கூடிய அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நடிக்க தெரியாதவர். எனவே தான் மறைந்த முதல்வர்  அம்மாவின் செல்லப்பிள்ளையாக திகழ்ந்தார். இப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் படைத்தளபதியாக இருந்து மதுரையில் இயக்கத்தை வலுவோடும், பொலிவோடும் நடத்தி வருகிறார். இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க.என்பதை உணர்ந்து இன்றைக்கு இளைஞர் பட்டாளம் அ.தி.மு.க. ஐக்கியமாகி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் புதூர் துரைப்பாண்டியன், சி.தங்கம், வில்லாபுரம் ஜெ.ராஜா, முன்னாள் மேயர் கு.திரவியம், அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற மாநில துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், பகுதி கழக செயலாளர் மகேந்திரன், பஜார் துரைபாண்டியன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து