முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கங்குலி பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறிய சேவாக்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜூலை 2018      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி : இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு நேற்று 46-வது பிறந்த நாளாகும். அவருக்கு முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், வி.வி.எஸ்.லட்சுமணி, டிராவிட் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

இந்திய அணியின் கேப்டன்கள் வரிசையில் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் சவுரவ் கங்குலி.   கடந்த 1990களில் இந்திய அணிக்கு அறிமுகமாகினார் சவுரவ் கங்குலி. தனது திறமையாலும், தலைமைப் பண்பாலும் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

கங்குலியின் 46-வது பிறந்தநாளுக்கு முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் வாழ்த்துக்கள் கூறியுள்ளார். மேலும், 4 விதமான படங்களை அதில் பகிர்ந்துள்ளார். முதல்படத்தில் கங்குலி சிக்ஸர் அடிப்பது போலவும், 2-வது படத்தில் ஒரு தலையில் ரத்தம் வழிவது போலவும், 3-வது படத்தில் கங்குலி தலைமுடி கலைந்திருப்பது போலவும், 4-வது படத்தில் கங்குலி சட்டையை கழற்றியிருப்பது போலவும் பதிவிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஸ்டெப் 1- கங்குலி களத்தில் இருந்தால் சிக்ஸர் பறக்கும், ரசிகர்கள் கண்ணை திறந்து வைத்துக் கொண்டு ஆடிப்பாடி மகிழ்வார்கள்.

ஸ்டெப் 2- கங்குலி அடித்து விளையாடத் தொடங்கி விட்டால், பந்து வீச்சாளர்களை பொளப்பது மட்டுமல்லாமல், ரசிகர்களின் மண்டையையும் சிலநேரங்களில் பொளந்து விடுவார்.

ஸ்டெப் 3-  கங்குலி பந்து வீசினால், பந்தும் சுழலத் தொடங்கும், கங்குலியின் முடியும் சுழலத் தொடங்கும்.

ஸ்டெப் 4- வெற்றியை சிறப்பாகக் கொண்டாடக்கூடியவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தாதா . இவ்வாறு சேவாக் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து