முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோழி முட்டைக்கும், வருமான வரி சோதனைக்கும் என்ன சம்பந்தம்? தினகரனுக்கு அமைச்சர் ஜெயகுமார் பதில்

திங்கட்கிழமை, 9 ஜூலை 2018      வர்த்தகம்
Image Unavailable

சென்னை, வருமான வரி சோதனைக்கும் கோழி முட்டைக்கும் என்ன சம்பந்தம்? என்று தினகரன் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் ஜெயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். அதன் விபரம் வருமாறு:-

லோக் ஆயுக்தா வலுவான அமைப்பாக இருக்குமா? மக்களிடம் கருத்து கேட்கவில்லை என அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளதே?

லோக் ஆயுக்தா மசோதா வலுவான அமைப்பாக இருக்குமா என்ற கேள்விக்கு சிறிது காலத்தில் விடை தெரியும்.

கட்சியை வலுப்படுத்தி ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா வருகை தருவதாக கூறப்படுகிறதே?

கட்சியை வலுப்படுத்த தேசியக் கட்சிகளின் தலைவர்கள் அந்தந்த மாநிலங்களுக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில் அமித்ஷா தமிழ்நாட்டுக்கு வருகிறார். அமித்ஷா வருகையில் அரசியல் உள்நோக்கம் இல்லை.

அடுத்த தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. தான் கூட்டணி வைக்கும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியிருக்கிறாரே?

எந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து தேர்தல் நேரத்தில் செயற்குழு, பொதுக்குழுவைக் கூட்டி கட்சித் தலைமை தான் முடிவு செய்யும். 1967-லேயே காங்கிரஸுக்கு சமாதி கட்டியாகி விட்டது. காங்கிரஸ் இனி எழப்போவது இல்லை. அனுமானத்தின் அடிப்படையில் கருத்து சொல்வதை ஏற்க முடியாது.

ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு தி.மு.க.வுடன் வேறுபட்டுள்ளதே?
இதுதொடர்பாக அ.தி.மு.க. சார்பில் சட்ட ஆணையத்திற்கு கடிதம் வழங்கப்பட்டது. 5 ஆண்டுகள் ஆட்சி நடைபெற வேண்டும். அதன்படி 2021-ல் தான் ஆட்சி முடிகிறது. இந்த கொள்கையை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏற்றுக் கொண்டார். அதனால், அதனை அமல்படுத்தலாம். ஆனால், 2024-ல் அமல்படுத்தலாம் என்பது அ.தி.மு.க.வின் வாதம். தி.மு.க. அவர்களின் கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.

சத்துணவுக்கு முட்டை விநியோகிக்கும் நிறுவன உரிமையாளர்களின் இல்லங்களில் வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது. முட்டை வடிவத்தில் அணுகுண்டு என  தினகரன் கூறியிருக்கிறார்?
அரசின் மீது புழுதியை வாரித் தூற்றும் எண்ணம் தான் தினகரனுக்கு உள்ளது. பொழுது விடிந்தால் அரசைத் தாக்கிப் பேசுவது அவரின் வாடிக்கையாகி விட்டது. வருமான வரி சோதனைக்கும் கோழி முட்டைக்கும் என்ன சம்பந்தம்? அவர்களுக்கு வந்த தகவல் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து