முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துருக்கியில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து: 24 பேர் பலி

திங்கட்கிழமை, 9 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

அங்காரா : துருக்கியில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலியாகி உள்ளனர். 80 பேர் படுகாயமடைந்தனர். 

துருக்கியின் பிகுலே பகுதியிலிருந்து இஸ்தான்புல் நகரத்திற்கு இந்த ரயில் சென்று கொண்டிருந்தது. அந்த நாட்டில் கடந்த சில நாட்களாக மிகவும் அதிக அளவில் மழை பெய்து வந்தது. இதனால் சில இடங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இஸ்தான்புல் நகரத்திற்கு சென்ற அந்த ரயில் விபத்துக்குள்ளாகியது. மொத்தம் 360 பேர் அந்த ரயிலில் பயணித்தனர். இந்த விபத்து காரணமாக 24 பேர் பலியாகி உள்ளனர். 80 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நிறைய பேர் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். பலர் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் நிறைய பேர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மழை, மண் சரிவு காரணமாக ரயில் தடம் புரண்டது என்று கூறப்படுகிறது. அங்கு தற்போது மீட்பு பணி நடைபெற்று வருகிறது. 100-க்கும் அதிகமான ஆம்புலன்ஸ், மீட்பு குழுவினர் சம்பவ இடத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து