முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாய்லாந்து சிறுவர்களை மீட்க சிறிய வகை நீர் மூழ்கி கப்பல் உருவாக்கம்

திங்கட்கிழமை, 9 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

பாங்காக் : தாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களை மீட்க, எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் சிறிய நீர்முழ்கி கப்பல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது வெறும் எட்டு மணி நேரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களில் இதுவரை 6 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை மீட்க இரண்டாம் கட்ட மீட்பு பணி தொடங்கியுள்ளது. குகையின் வேறு பகுதியில் துளையிட்டு அதுவழியாக தண்ணீரை உறிஞ்சி எடுத்து விட்டு, மாணவர்களை வெளியே கொண்டு வரலாம் என்று முடிவெடுத்தனர்.

இதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவர் எலோன் மஸ்க்,  குறுகலான பாதைக்குள் ஆக்சிஜன் சிலிண்டர்களை சுமந்து செல்லும் வகையில், மிக சிறிய நீர் மூழ்கி கப்பலை உருவாக்கி இருக்கிறார். இதை வெளியில் இருந்து இயக்க முடியும். இது முழுக்க தானாக இயங்கும் திறனும் கொண்டுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டுகளில் ஒன்றான, பல்கான் ஹெவி ராக்கெட் மூலம் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இது தானாகவும் இயங்கும், வெளியில் இருந்தும் இயங்க வைக்கலாம். இதை குறுகலான, குகையின் பாதைக்குள் அனுப்ப திட்டமிட்டுள்ளனர். அதன்படி, உள்ளே ஆக்சிஜன் சிலிண்டர்களை அனுப்ப முடியும். இதை இப்போது சோதனை செய்து வருகின்றனர். வெறும் 8 மணி நேரத்தில் இந்த மொத்த கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. இதை இன்னும் சில நிமிடத்தில் தாய்லாந்து கொண்டு செல்ல உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து