முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வழக்கு விசாரணைகளை இனி நேரடி ஒளிபரப்பில் காணலாம் - அனுமதி அளித்தது சுப்ரீம் கோர்ட்

திங்கட்கிழமை, 9 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட்டுகளில் நடக்கும் வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட்டுகளில் நடக்கும் வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வரும் 23-ம் தேதி தாக்கல் செய்யுமாறு அடர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலை சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி சட்டக் கல்லூரி மாணவர் தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம். கான்வில்கர் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.

நீதிமன்ற நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வது குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு கடந்த மே மாதம் 3-ம் தேதி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதையடுத்து , நேற்று மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நீதிமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்யலாம் என்றும், ஏற்கனவே இந்த நடைமுறை பல நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அடர்னி ஜெனரல் கூறியிருந்தார்.

இதையடுத்து, சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட்டுகளில் நடக்கும் வழக்கு விசாரணைகளை இனி நேரடி ஒளிபரப்பு செய்யலாம் என்றும், இதன் மூலம் கிராமப்புற மக்களும் வழக்கு விசாரணை குறித்து அறிந்து கொள்ள முடியும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் நீதிமன்ற செயல்பாடுகள் பற்றி அனைத்து மக்களும் தெரிந்து கொள்வதற்கு நேரடி ஒளிபரப்பு உதவும் என்றும் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து