மும்பையை புரட்டி போட்ட கனமழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திங்கட்கிழமை, 9 ஜூலை 2018      இந்தியா
mumbai heavy rain 2018 7 9

மும்பை : மும்பையில் தொடர்ந்து 3 நாளாக விடாது கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. சாலைகள், ரயில் தண்டவாளங்கள், விமான ஓடுபாதைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து முடங்கி உள்ளது.

தெருக்களிலும், முக்கிய சாலைகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. இதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மழை தீவிரமடைந்து வருவதால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. கனமழையால் வெளிச்சம் மிக குறைவாகவே இருப்பதால், மழைநீர் தேங்காத சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து