முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரம் திருக்கோயிலில் சென்னை ஐ.ஐ.டி. தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆய்வு: தூண்களை பழமை மாறாமல் சீரமைக்க நடவடிக்கை.

திங்கட்கிழமை, 9 ஜூலை 2018      ராமநாதபுரம்
Image Unavailable

  ராமேசுவரம்,- ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் இராண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள   பழமையான தூண்களில்  சேதமடைந்து காணப்படும் பகுதியை சென்னை  இந்திய தொழில்நுட்ப ஆராய்ச்சி பல்கலை கழகத்தின் வல்லுனர்கள் நேற்று ஆய்வு நடத்தினர்.
  உலக புகழ்பெற்ற சிவ ஸ்தலம் அமைந்துள்ள ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மூன்று பிரகாரகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலில் முதல் மற்றும் மூன்றாம் பிரகாரகங்கள் முழுவதும் முடிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டு திருக்கோயில் நிர்வாகம் பாரமரித்து வருகிறது.திருக்கோயிலின் அமைந்துள்ள இராண்டாம் பிரகாரம் வடக்கு பகுதி முழுமை பெறாமல் ஒரு  பகுதியோடு முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாக உள்ளது.இந்த பிரகாரத்தை முழுமையாக முடிப்பதற்கு திருக்கோயில் நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்நிலையில் இந்த பிரகாரத்தில் முடிக்கப்பட்ட பாதி பகுதியில் அமைந்துள்ள தூண்கள் சிதைந்து சேதமடைந்துள்ளது.இதனையடுத்து முன்பு மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில்  சில நாட்களுக்கு முன்பு ஏற்ப்பட்ட தீ விபத்தில் திருக்கோயில் பிரகாரகங்களில் அமைந்துள் தூண்கள் வெட்பம் தாக்கப்பட்டு சேதமடைந்து கீழே விழுந்து மண்டபம் இடிந்து விழுந்தது.இதன் எதிரெலியாக தமிழகத்தில் உள்ள தமிழக இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோயில்களை தொழில்நுட்ப வல்லுனர்களை கொண்டு ஆய்வு நடத்தி அறிக்கையை தமிழக இந்து அறநிலையத்துறை  கேட்டுள்ளது.அதன் அடிப்படையில் ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில்  அமைந்துள்ள பிரகாரகங்களை ஆய்வு நடத்துவதற்காக சென்னை ஐ.ஐ.டி யை சேர்ந்த தொழில் நுட்ப திட்ட அலுவலர்கள் கற்பகம் மற்றும் சுதாகர், தொழில் நுட்ப வல்லுனர்களான மதன்,ஜஸ்வர்யா ஆகியோர்கள் அடங்கிய குழு திருக்கோயிலுக்கு நேற்று வருகை தந்தனர்.அவர்கள்  திருக்கோயிலில்   பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து முழுமையாடையாமல் அமைந்துள்ள இராண்டாம் பிரகாரத்தின் பகுதிகளையும்.பிரகாரத்தின் அமைந்துள்ள தூண்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இந்த ஆயவில் முதலில் கருங்கற்களால் உராய்வு செய்தும்,அல்ட்ரா ஸ்கேன் டெஸ்ட் குரவி மூலமும் ஆய்வு செய்தனர்.இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த ஆய்வின் முழு அறிக்கையை தமிழக இந்து அறநிலையத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், திருக்கோயிலில் சீதைந்து சேதமடைந்த தூண்களை பழமை மாறமால் சீரமைக்கவும்  நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். ராமேசுவரம்  திருக்கோயில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி, திருக்கோயில் உதவிக்கோட்ட பொறியாளர் மயில்வாகனன்,பேஷ்கார் செல்லம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.                                                 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து