டி-20 தொடரை வென்றது இந்தியா ! ஹர்திக் பாண்ட்யா சிறந்த ஆல்ரவுண்டர்: கேப்டன் விராட் கோலி புகழாரம்

திங்கட்கிழமை, 9 ஜூலை 2018      விளையாட்டு
Hartik Pandya 2018 7 9

லண்டன் : ’ஹர்திக் பாண்ட்யா சிறந்த ஆல் ரவுண்டர், அணிக்கு என்ன தேவை என்பதைப் புரிந்து விளையாடுவார்’ என்று விராத் கோலி புகழ்ந்தார்.

முதல் போட்டியில்...

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது, இந்திய கிரிக்கெட் அணி. இரு அணிகளுக்கு இடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி, மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில், இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் தனது மாயச் சுழலை பயன்படுத்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் களமிறங்கிய இந்திய அணி, லோகேஷ் ராகுலின் அதிரடி சதத்தால் அபார வெற்றி பெற்றது. 2 வது போட்டி கார்டிப்பில் நடந்தது. இதில் இங்கிலாந்து அணி, அலெக்ஸ் ஹேல்ஸின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி பெற்றது.

மூன்றாவது போட்டி....

இந்நிலையில் தொடர் யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி பிரிஸ்டலில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டு களை இழந்து 198 ரன்கள் எடுத்தது. ஜேசன் ராய் 67 ரன்களும், பட்லர் 34 ரன்களும், ஹேல்ஸ் 30 ரன்களும் எடுத்தனர். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி, 220 ரன்களுக்கும் மேல் குவிக்கும் என்ற நிலையில் இந்திய பந்துவீச்சாளர்கள் அதைக் கட்டுப்படுத்தினார்கள். ஹர்திக் பாண்ட்யா அபாரமாக பந்துவீசி, 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

ஆட்டநாயகன்...

இதனால் அவர்களின் ரன் வேகம் கட்டுப்படுத்தப்பட்டது. தொடர்ந்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, ரோகித் சர்மாவின் அதிரடியால் 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. ரோகித் சர்மா, 56 பந்தில் 5 சிக்சர்கள், 11 பவுண்டரிகளுடன் 100 ரன்களும் கேப்டன் விராத் கோலி 43 ரன்களும் ஹர்திக் பாண்ட்யா 14 பந்துகளில் 2 சிக்சர், 4 பவுண்டரியுடன் 33 ரன்களும் எடுத்தனர். ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.

பெருமையாக...

வெற்றிக்குப் பின்னர் பேசிய, இந்திய கேப்டன் விராத் கோலி, ‘ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி, 225-230 ரன்கள் குவிப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் எங்கள் பந்துவீச்சாளர்கள் 198 ரன்களுக்குள் அவர்களை கட்டுப்படுத்திவிட்டார்கள். அது பெருமையாக இருக்கிறது. 11-வது ஓவரில் இருந்து 20-வது ஒவர் வரை பந்துவீசியது அருமை. பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை கொடுத்து விக்கெட்டை வீழ்த்தினார்கள்.

ஆல்ரவுண்டர்....

 ஹர்திக் பாண்ட்யா சிறந்த ஆல்ரவுண்டர். அதை போட்டியில் சிறப்பாக வெளிப்படுத்தினார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அவர் திறமை மீது அதிக நம்பிக்கைக் கொண்டவர். என்ன தேவை என்பது அவருக்கு தெரியும். விக்கெட்டுகளை வீழ்த்தியும் பவுண்டரியும் சிக்சருமாக விளாசியும் தனது திறமையை வெளிப்படுத்தினார். பிட்ச், பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. பேட்ஸ்மேனாக ரசித்து ஆடினோ ம். ஆனால் பந்துவீச்சாளர்களுக்கு கஷ்டமாக அமைந்துவிட்டது. தொடர்ந்து அணியில் வித்தியாசமான மாற்றங்களை செய்ய இருக்கிறோம். இந்த தொடரை வென்று இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை வெற்றியுடன் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்றார்.

அதிகமாக ரன்கள்...

இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறும்போது, ‘இந்த சின்ன மைதானத்தில் இன்னும் அதிகமாக ரன்கள் குவித்திருக்க வேண்டும். பிட்ச், பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. ஜேசன் ராயும் பட்லரும் சிறப்பான தொடக்கத்தைத் தந்தார்கள். ஆனால், இந்திய பந்துவீச்சாளர்கள் ரன் குவிப்பை கட்டுப்படுத்திவிட்டார்கள்’ என்றார்.

COCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து

Funny Golden Retriver demanding to pat repeatedly and she loves it!!

கட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்

கண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்

அழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

வீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil

Racing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து