முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 உலக சாதனைப் படைத்த டோனி !

திங்கட்கிழமை, 9 ஜூலை 2018      விளையாட்டு
Image Unavailable

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 3 பேரை எம்எஸ் டோனிதான் கேட்ச் பிடித்து வெளியேற்றினார். அத்துடன் சித்தார்த் கவுல் பந்தில் பிளங்கெட்டை (9) கேட்ச் பிடித்து வெளியேற்றினார். மொத்தம் இங்கிலாந்து இழந்த 9 விக்கெட்டில், 5 விக்கெட்டை கேட்ச் மூலமாகவும், ஒரு விக்கெட்டை ரன்அவுட் மூலமாகவும் வீழ்த்தினார். இதன்மூலம் ஒரு டி20 போட்டியில் 5 கேட்ச்கள் பிடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை டோனி படைத்துள்ளார்.

அத்துடன் டி20 போட்டியில் 54 பேரை கேட்ச் பிடித்து, டி20 போட்டியில் 50 கேட்ச் பிடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனைப் படைத்துள்ளார். இதன் மூலம் ஒரே போட்டியில் இரண்டு உலக சாதனைப் படைத்து தல டோனி அசத்தியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் தினேஷ் ராம்தின் 34 கேட்ச்கள் பிடித்து 2-வது இடத்தில் உள்ளார். தென்ஆப்பிரக்கா டி காக் 30 கேட்ச்கள் உடன் 3-வது இடத்தில் உள்ளார்.

முதல் கேட்ச் : சாஹர் வீசிய பந்தில் ராய்.
2-வது கேட்ச் : ஹர்திக் பாண்டியா வீசிய பந்தில் அலெக்ஸ்.
3வது கேட்ச் : ஹர்திக் பாண்டியா வீசிய பந்தில் மார்கன்.
4வது கேட்ச் : ஹர்திக் பாண்டியா வீசிய பந்தில் ஜானி.
5வது கேட்ச் : கவுல் வீசிய பந்தில் ப்ளங்கட்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து