காஷ்மீரில் துப்பாக்கி சண்டை 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2018      இந்தியா
gun-shoot5 2017 12 29

சோபியான்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். மேலும் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளையும் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

சோபியான் மாவட்டத்துக்குட்பட்ட குந்தலன் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின்படி நேற்று அதிகாலை அந்த பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்று வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்து வந்தனர். இந்த தாக்குதலில் இதுவரை 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர் ஒருவரும், பொதுக்களில் 3 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து