முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்னும் தொடங்கவே இல்லையாம்! அதற்குள் ஜியோ இன்ஸ்டிடியூட்டுக்கு ரூ. 1000 கோடி வளர்ச்சி நிதி வழங்கிய மத்திய அரசு

செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: இன்னும் தொடங்கப்படாத ஜியோ இன்ஸ்டிடியூட் என்ற கல்லூரிக்கு, மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ரூ.1000 கோடி வளர்ச்சி நிதி வழங்கி இருக்கிறது.

ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ நிறுவனம், தற்போது கல்லூரி ஒன்றை தொடங்க இருக்கிறது. ஆனால் இதற்கான திட்டமிடல் யோசனை மட்டுமே வெளியாகி உள்ளது. இன்னும் உறுதியாக என்ன மாதிரியான கல்லூரி தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்படவில்லை. அதே போல் எந்த இடத்தில் கல்லூரி தொடங்கப்படும் என்று கூறப்படவில்லை. 2021-க்குள் கல்லூரி தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பல்கலைக்கழக மானியக்குழு அவ்வப்போது இந்தியாவில் சிறந்த பல்கலைக்கழகங்களை தேர்வு செய்து அவர்களுக்கு நிதி வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த முறை 6 கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து எல்லோருக்கு ரூபாய் 1000 கோடி வளர்ச்சி நிதி கொடுத்தது.

இதில் மணிபால் பல்கலைக்கழகம், பிட்ஸ் பிலானி, ஐ.ஐ.டி. மும்பை, ஐ.ஐ.டி டெல்லி, ஐ.ஐ.எஸ்.சி பெங்களூர் ஆகியவற்றுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆறாவது கல்லூரியாக ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ இன்ஸ்டிடியூட்க்கும் பரிசு வழங்கப்பட்டு இருக்கிறது. அங்கு மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த இந்த பணத்தை செலவிட வேண்டும்.

ஆனால், உலகத்தில் இப்படி ஜியோ இன்ஸ்டிடியூட் என்ற கல்லூரி எங்குமே இல்லை. இப்போது வரை அது முகேஷ் அம்பானியின் அடுத்த கட்ட திட்டம், கனவு மட்டுமே. இதற்காக மத்திய அரசு ரூபாய் 1000 கோடியை வாரி இறைத்து இருக்கிறது. இது மக்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது. அதன்படி, இந்த கல்லூரி இன்னும் கட்டப்படவில்லை என்றால் கூட, இந்த கல்லூரி தற்போது கட்டுவதற்கான அனுமதி வேண்டி கடிதம் கொடுத்துள்ளது. யு.ஜி.சி. விதியின் படி அனுமதி கடிதம் அளித்த கல்வி நிறுவனம் ஒன்றை விருது வழங்க தேர்வு செய்யலாம். ஆனால் அந்த கல்லூரி அடுத்த 3 வருடங்களுக்குள் கட்டப்பட வேண்டும். இதன் அடிப்படையில்தான் இந்த விருது வழங்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து