முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெற்றிகரமாக முடிந்தது டி-டே ஆபரேஷன்! தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு - மீட்புக் குழுவினருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

ஜகாத்தா : தாய்லாந்து நாட்டில் குகையில் சிக்கி தவித்த கால்பந்து பயிற்சியாளர் மற்றும் 12 சிறுவர்கள் கடந்த சில நாட்களாக நடந்த மூன்று கட்ட மீட்புபணிக்கு பிறகு நேற்று அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்பு குழுவினரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

கனமழையால்...

தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையை பார்ப்பதற்காக கடந்த ஜூன் 23-ம் தேதி சென்ற கால்பந்து வீரர்களான 11 வயது முதல் 16 வயதுடைய 12 சிறுவர்களும், அவரது பயிற்சியாளரும் சென்றனர். அவர்கள் சென்ற நேரம் அங்கு வானிலை மாற்றம் நேரிட்டு கனமழை கொட்டியது. கனமழை காரணமாக 10 கி.மீ. நீளம் உடைய குகையில் வெள்ள நீர் புகுந்தது. இதனால் குகையை நீரும், சேறும் சூழ்ந்தது.இதனால் சுற்றுலா சென்ற சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரால் குகையை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் இரண்டு வாரங்களாக உணவும், நீரும் இன்றி அவர்கள் குகைக்குள் சிக்கினர்.

பல மாதங்கள்...

இந்தச் சூழலில், தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த பிரிட்டன் நீச்சல் வீரர் ஒருவர் குகையின் பாறை மேடு ஒன்றில் அந்த 13 பேரையும் 10 நாள்களுக்குப் பிறகு கண்டறிந்தார். பசி மற்றும் களைப்பால் மிகவும் சோர்வுற்றும், மெலிந்தும் காணப்பட்ட அவர்கள் அந்த வீரரிடம் பேசிய விடியோ தாய்லாந்து கடல் அதிரடிப்படையால் வெளியிடப்பட்டது.  அதன் தொடர்ச்சியாக, அவர்களுக்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டன. குகைக்குள் சிறுவர்கள் இருக்குமிடம் கண்டறியப்பட்டாலும், அவர்களுக்கு சிறப்பு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அல்லது குகையில் வெள்ள நீர் வடியும் வரை காத்திருந்து அவர்களை வெளியே அழைத்து வரலாம் என்று மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். எனினும், அதற்கு பல மாதங்கள் ஆகலாம் என்று கூறப்பட்டது.

பன்னாட்டு குழுவினர்...

இந்த நிலையில் பன்னாட்டு மீட்புக் குழுவினரும் பணியில் இணைந்து கொண்டனர். அவர்களை மீட்பதற்கான பணிகள் தொடங்கியது. மோசமான வானிலை காரணமாக மீட்பு பணியில் தொடர்ந்து சிக்கல் நிலவியது. இதற்கிடையே குகைக்குள் ஆக்ஸிஜன் அளவு குறைந்து வருவதாலும், சிக்கியுள்ளவர்களின் உயிருக்கு ஆபத்தும் ஏற்பட்டது. மழை கொட்டிய நிலையில், மேலும் மழை பெய்யும் என்று வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து காத்திருப்பதால் எதுவும் நடக்கப்போவது கிடையாது என 12 சிறார்கள் மற்றும் அவர்களுடைய கால்பந்து பயிற்சியாளரை காப்பாற்றும் பணியில் மீட்பு குழு தீவிரமாக இறங்கியது.

டி-டே ஆபரேஷன்...

சிறுவர்களையும், பயிற்சியாளரையும் மீட்க தீவிரமாக திட்டம் வகுக்கப்பட்டது. முக்குளிப்பவர்கள் உதவியுடன் மீட்பு பணியை தொடங்கியது.  சிறுவர்கள், பயிற்சியாளர் என 13 பேரும் நல்ல மன வலிமையுடனும், உடல் வலிமையுடனும் காணப்பட்டதால் அவர்களை மீட்க அதிரடியாய் திட்டமிட்டு, டி-டே என்ற ஆபரேஷன் தொடங்கப்பட்டது.

முதல் கட்டமாக ....

சிறுவர்களையும், பயிற்சியாளரையும் மீட்பதற்காக முக்குளிப்பு வீரர்கள் குகைக்குள் அனுப்பட்டனர். ஞாயிறு அன்று காலை 10 மணியளவில் சென்ற அவர்கள் மாலை 5:45 மணியளவில் சிறார்களை வெளியே கொண்டுவந்தனர். அப்போது 4 சிறார்கள் வெளியே கொண்டு வரப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் 4 சிறுவர்கள்...

நேற்று முன்தினம் இரண்டாம் கட்ட நடவடிக்கையின் போதும் 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். நேற்று கூடுதல் முக்குளிப்பவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டார்கள், அப்போது பயிற்சியாளரையும், எஞ்சிய சிறவர்களையும் அவர்கள் வெளியே பத்திரமாக கொண்டு வந்தார்கள். மிகவும் குறுகிய குகைக்குள், சகதி கலந்த வெள்ள நீரில், ஆஜ்ஸிஜன் டேங்குகளுடன் பயணித்து முக்குளிப்பவர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர், அவர்களுக்கு பல்வேறு தரப்பில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.



இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து