மதுரையில் அம்மா அரசின் சாதனை விளக்க பேரணி முதல்வர் எடப்பாடிக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அழைப்பு

செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2018      தமிழகம்
RB Udayakumar 2017 8 16

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி வரும் 15-ம் தேதி மதுரையில் நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசின் ஓராண்டு சாதனையை விளக்கிடும் வகையில், அம்மா பேரவையின் சார்பில், வரும் 15-ம் தேதி மதுரை, பாண்டி கோவில், அம்மா திடலில் இருந்து சைக்கிள் பேரணி நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழை, அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமியிடம் நேற்று அம்மா பேரவைச் செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் வழங்கினார்.

அவருடன் அமைப்புச் செயலாளரும், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் மற்றும் இந்து சமய, அறநிலையத் துறை அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன், தூத்துக்குடி மாவட்ட பேரவைச் செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ மற்றும் அம்மா பேரவையின் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் நேரில் வழங்கி சைக்கிள் பேரணியை துவக்கி வைத்து சிறப்பித்திடுமாறு வேண்டுகோள் வைத்தனர். 

சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து