தமிழக அரசின் சாதனை விளக்க கண்காட்சியில் சிறந்த அரங்கு அமைத்த சுகாதாரத்துறைக்கு முதல் பரிசு முதல்வர் இ.பி.எஸ் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2018      தமிழகம்
edapadi cm 2017 09 30

சென்னை: முதல்வர் .எடப்பாடி. பழனிசாமி தலைமையிலான அரசின் ஓராண்டு சாதனைவிளக்க விழா மற்றும் கண்காட்சியில், சிறப்பாக அரங்குகள் அமைத்ததற்காக, மக்கள்நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைக்கு முதல் பரிசை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
 
முதல்வர் . எடப்பாடி பழனிசாமிதலைமையிலான அரசின் ஓராண்டு சாதனை விளக்க விழா மற்றும் கண்காட்சி, சென்னைகலைவாணர் அரங்கில் மார்ச் 23.ம்தேதி முதல் 30.ம்தேதி வரை நடைபெற்றது. இந்தக்கண்காட்சியில், செய்தி-மக்கள் தொடர்புத் துறை, சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்துசமய அறநிலையத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, வேளாண்மை மற்றும்தோட்டக்கலைத் துறை, காவல் துறை, மீன்வளத் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை, சமூக நலத்துறை, பொதுப் பணித்துறை, பள்ளிக் கல்வித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கைத்தறி,கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தொழிலாளர் மற்றும்வேலைவாய்ப்புத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தகவல் தொழில் நுட்பவியல் துறை, உயர்கல்வித்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, எரிசக்தித் துறை, தொழில்துறை ஆகிய 27 அரசுத் துறைகள், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம்(ஆவின்) மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக உணவகம் (தமிழ்நாடு உணவகம்)ஆகிய 2 அரசு சார்பு நிறுவனங்கள் பங்கேற்று, அரங்குகள் அமைக்கப்பட்டன.

இக்கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு, அரசின் ஓராண்டு சாதனைவிவரங்கள் மற்றும் நலத்திட்டங்களை அறிந்து பயன்பெற்றனர்.இக்கண்காட்சியில் சிறப்பாக அரங்குகள் அமைத்ததற்காக, முதல் பரிசு பெற்றமக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ஆகியோருக்கு முதல் பரிசுக்கான கேடயத்தையும்; இரண்டாம் பரிசுகளை பெற்ற வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின்சார்பில் துணை முதலமைச்சர்.ஓ. பன்னீர்செல்வம் மற்றும்வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் ச.கிருஷ்ணன்,ஆகியோருக்கும்; நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின்சார்பில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன், ஆகியோருக்கு இரண்டாம் பரிசுக்கானகேடயங்களையும்;மூன்றாம் பரிசுகளை பெற்ற கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறைசார்பில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்.ஓ.எஸ். மணியன்மற்றும் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர்க. பணீந்திர ரெட்டிஆகியோருக்கும்; வேளாண்மைத் துறை சார்பில்வேளாண்மைத் துறை அமைச்சர். துரைக்கண்ணு மற்றும்வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர்ககன்தீப் சிங் பேடி, ஆகியோருக்கும்; பொதுப்பணித் துறை சார்பில் பொதுப்பணித் துறை முதன்மைச்செயலாளர்.எஸ்.கே. பிரபாகருக்கும் மூன்றாம் பரிசுக்கான கேடயங்களை முதல்வர் எடப்பாடி. பழனிசாமி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர். கடம்பூர் ராஜூ, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் / முதன்மைச் செயலாளர்ராஜேஷ் லக்கானி., தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய முதன்மைச்செயலாளர் / மேலாண்மை இயக்குநர் ஷம்பு கல்லோலிகர், தமிழ் வளர்ச்சிமற்றும் செய்தித் துறை செயலாளர் வெங்கடேசன்நகர் ஊரமைப்புஆணையர் டாக்டர் பீலா ராஜேஷ்கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநர். முனியநாதன்வேளாண்மைத் துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி,தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் என். சுப்பையன், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை ஆணையர்.சுன்சோங்கம் ஜடக் சிரு. செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர். சங்கர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறைஇயக்குநர் குழந்தைசாமி, செய்தி மக்கள் தொடர்புத் துறை கூடுதல்இயக்குநர்கள். எஸ்.பி. எழிலழகன் மற்றும் உல. ரவீந்திரன், மற்றும் அரசு உயர்அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Easy, Simple Rangoli Designs for Beginners | 7 Beautiful Rangoli design for festivals | LGArts - 2

Great Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil

சுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways

Easy 30 minutes Milk kova recipe in Tamil | Milk kova seivathu eppadi | Paalkova recipe in Tamil

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து