முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனியில் சர்ச்சைக்குள்ளான ஐம்பொன் சிலை கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைக்க முடிவு

செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல்,-பழனியில் சர்ச்சைக்குள்ளான ஐம்பொன் சிலையை கும்பகோணம் ஞிதிமன்றத்தில் விசாரணைக்கு ஒப்படைக்க சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் முடிவுசெய்துள்ளனர்.
முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனியில் உள்ள மூலவர் சிலை 3000 ஆண்டுகளுக்கு முந்தைய போகரால் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து அபிஷேகங்கள் செய்யப்பட்டதால் இந்தசிலை சேதமடைந்ததாக கூறி கடந்த 2003ம் ஆண்டு புதிய சிலை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 200 கிலோ எடையில் புதிய ஐம்பொன் சிலை உருவாக்கப்பட்டது. கடந்த 2004ம் ஆண்டு இந்தசிலை மூலவர் சந்நிதியில் வைக்கப்பட்டது. ஒரே கருவறையில் 2 சிலைகள் வைக்கப்பட்டதால் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சி எழுந்தது. ஆனால் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஐம்பொன் சிலையில் சிறிது மாதங்களிலேயே மாற்றங்கள் ஏற்பட்டது. இதன் காரணமாகவும், பக்தர்கள் எதிர்ப்பு காரணமாகவும் இந்தசிலை கருவறையில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு தனி அறையில் வைக்கப்பட்டது. தொடர்ந்து அந்த சிலைக்கு நித்ய ஞீஜைகள் நடந்து வருகிறது.
இதனிடையே தமிழகம் முழுவதும் சிலை கடத்தல் குறித்து விசாரணை நடத்தி வந்த ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் பழனியில் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஐம்பொன் சிலையை ஆய்வு செய்தனர். அந்த சிலையில் போதிய தங்கம் சேர்க்கப்படாமல் மோசடி நடந்தது தெரியவந்தது. இதனையடுத்து சிலையை வடிவமைத்த ஸ்தபதி, 2004ம் ஆண்டு கோவில் இணை ஆணையராக இருந்த கே.கே.ராஜா ஆகியோரை கைதுசெய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த அப்போதைய நகை மதிப்பீட்டாளர் உட்பட மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அடுத்த கட்ட நடவடிக்கையாக 2004ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக இருந்த தனபாலிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். ஆனால் அவர் தன் மீதான கைது நடவடிக்கையை தவிர்க்கும் வகையில் மதுரை ஐகோர்ட் கிளையில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை சிலை கடத்தல் குறித்த வழக்குகளை விசாரித்து வரும் கும்பகோணம் ஞிதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றுக் கொள்ளுமாறு உத்தரவிட்டது. அதன்படி கடந்த வாரம் கும்பகோணம் ஞிதிமன்றத்தில் ஆஜரான தனபால் நிபந்தனை ஜாமீன் பெற்றார்.
இந்நிலையில் சிலை கடத்தலை விசாரித்து வந்த டி.எஸ்.பி. கருணாகரன் இடமாற்றம் செய்யப்பட்டார். இது பக்தர்கள் மத்தியில் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. சிலை கடத்தல் வழக்கை ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவினரே விசாரிக்க அனுமதிக்க வேண்டும், இதற்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
எனவே சர்ச்சைக்குள்ளான ஐம்பொன் சிலையை கும்பகோணம் ஞிதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் பழனி கோவிலுக்கு வந்தனர். இதனையடுத்து தனி அறையில் வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சிலைக்கு சிறப்பு ஞீஜைகள் செய்யப்பட்டு ஐதீக முறைப்படி அதன் சக்தி குறைக்கப்பட்டது. இதனையடுத்து அந்தசிலை கும்பகோணம் ஞிதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ் சென்னையில் இருப்பதால் அவர் வந்தவுடன் முறையான அறிவிப்பு கொடுத்து இந்த சிலை கொண்டு செல்லப்படும் என்று தெரிகிறது.
பழனி சிலை மோசடி மீண்டும் அடுத்த கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஐம்பொன் சிலையை கோவிலில் இருந்து அகற்ற இந்து அமைப்பினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் மீண்டும் பழனி  கோவில் சிலை வழக்கு பரபரப்பை எட்டியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து