முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக பிரெட் கவனாக் தேர்வு

செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  : அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக பிரெட் கவனாக்கை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தேர்வு செய்துள்ளார்.

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து வந்த அந்தோணி கென்னடி (வயது 81), இந்த மாதம் 31-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதனால் அடுத்த நீதிபதியினை தேர்வு செய்யும் பணியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈடுபட்டு வந்தார்.

முதல்கட்டமாக 25 பேர் கொண்ட உத்தேச பட்டியல் தயார் செய்யப்பட்டது. இப்பட்டியலில் இந்தியர் ஒருவரது பெயரும் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது அதில் இருந்து தேர்வான 4-பேரிடம் கடந்த 2-ந் தேதி டிரம்ப் நேர்காணல் நடத்தினார். இதைத் தொடர்ந்து மேலும் சிலரிடமும் நேர்காணல் நடத்திய பிறகு 3 பேர் கொண்ட இறுதிப்பட்டியல் தயார் செய்யப்பட்டது. அந்த பட்டியலில் பிரெட் கவனாக், எமி கோனி பேரட் மற்றும் ரேமண்ட் கெத்லெட்ஜ் ஆகிய 3 நீதிபதிகளின் பெயர்கள் இடம் பெற்றிருந்ததாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக பிரெட் கவனாக்கை அமெரிக்க அதிபர் டிரம்ப் தேர்வு செய்துள்ளார். அமெரிக்காவில் இப்பதவிக்கு கவனாக்கை விட தகுதியானவர்கள் யாரும் இல்லை என தொலைக்காட்சி உரையில் டிரம்ப் கூறி இருந்தாரென்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது 53 வயதாகும் பிரெட் கவனாக் முன்னர் கொலம்பியா மாவட்டத்திலுள்ள மத்திய மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து