விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச் - செரீனா கால்இறுதிக்கு தகுதி

செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2018      விளையாட்டு
Federer - Serena Williams 2018 7 10

லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செர்பியா வீரர் ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் கால்இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

3 முறை சாம்பியனும், 12-வது வரிசையில் இருப்பவருமான ஜோகோவிச் (செர்பியா) 4-வது சுற்றில் ரஷியாவைச் சேர்ந்த கச்சனோவை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 6-4, 6-2, 6-2 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால் இறுதியில் நிஷிகோரியை சந்திக்கிறார். மற்ற ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் பெடரர் (சுவிட்சர்லாந்து), ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), இஸ்னர் (அமெரிக்கா), நிஷிகோரி (ஜப்பான்), ரோனிக் (கனடா) ஆகியோர் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்கள்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), கெர்பர் (ஜெர்மனி), பெர்டன்ஸ் (நெதர்லாந்து), ஒஸ்டா பென்கோ (லாத்வியா), ஜுலியா ஜார்ஜஸ் (ஜெர் மனி), சிபுல்கோவா (சுலோ வாக்கியா), டாரியா கசாட் சினா (ரஷியா), கேமிலா ஜியோர்பி (இத்தாலி) ஆகியோர் 4-வது சுற்றில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்கள்.

சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து