21-வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி: சிறந்த வீரருக்கான 'கோல்டன் பால்' விருதை பெறப்போவது யார் ?

செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2018      விளையாட்டு
Goldel ball 2018 7 10

மாஸ்கோ : ரஷ்யாவில் 21-வது பிஃபா கால்பந்தாட்டப் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரில் அரையிறுதிப் போட்டிகள் நேற்று தொடங்கியது. அதில் பிரான்ஸ் - பெல்ஜியம், இங்கிலாந்து - குரோஷியா அணிகள் மோதுகின்றன. ஜூன் 14-ம் தேதி தொடங்கிய உலகக் கோப்பையில் உலகப் புகழ்பெற்ற வீரர்கள் லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் ஆகியோர் விரைவில் போட்டியில் இருந்து வெளியேறிவிட்டனர். இதனால் இந்தாண்டு உலகக் கோப்பை போட்டி தொடரில் சிறப்பாக விளையாடிய வீரருக்கு கொடுக்கப்படும் மிகவும் உயரிய விருதான் "கோல்டன் பால்" விருது யாருக்கு கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

"கோல்டன் பால்" விருது

உலகக் கோப்பைப் போட்டிகளில் வழங்கப்படும் விருதுகளில் மிகவும் உயரிய விருதாகக் கருதப்படுவது "கோல்டன் பால்" விருது. இது உலகக் கோப்பை தொடரின் சிறந்த வீரருக்கு வழங்கப்படும் விருதாகும். இவ்விருதினை பிஃபா அமைப்பின் தொழிநுட்ப குழுவினரால் வீரர்களின் திறன், திறமை, கோல் அடிக்கும் லாவகம் பின்பு சர்வதேச ஊடகங்களின் வாக்குகளின் அடிப்படையில் வீரர் தேர்வு செய்யப்படுவார்கள்.  மேலும் தொடரில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடிக்கும் வீரர்களுக்கும் முறையே வெள்ளி மற்றும் வெண்கல பந்துகளும் வழங்கப்படுகிறது.

லியோனல் மெஸ்ஸிக்கு...

முதலாவது உலகக் கோப்பை போ்டடியில் முதல் சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட போதும், விருதுகள் வழங்கப்படவில்லை. பின்பு, இந்த விருது 1982 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு இப்போது வரை நடைமுறையில் உள்ளது. பிரேசிலில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இவ்விருது அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது. இந்தாண்டு இவ்விருது பெல்ஜியத்தின் நட்சத்திர வீரர் ஈடன் ஹசார்டுக்கு கிடைக்கும் என பரவலான எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதுவரை கோல்டன் பால் பெற்றவர்கள்:

1982 – போலோ ரோஸி  (இத்தாலி)
1986 – டியகோ மரடோனா (ஆர்ஜென்டீனா)
1990 – சல்வாடோர் சில்லாக்கி (இத்தாலி)
1994 – ரொமாரியோ (பிரேசில்)
1998 – ரொனால்டோ (பிரேசில்)
2002 – ஒலிவர் கான் (ஜேர்மனி)
2006 – ஸினடின் சிடான் (பிரான்ஸ்)
2010 – டியகோ போர்லன் (உருகுவே)
2014 – லியனல் மெஸ்ஸி (ஆர்ஜென்டீனா)

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து