ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு: பாக்.தேர்தலில் இம்ரான் கட்சி வாக்குறுதி

செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2018      உலகம்
Imran-Khan 2018 7 10

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் வரும் 25-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தெஹ்ரிக் - இ - இன்சாப் கட்சியின் தேர்தல் அறிக்கையை, அதன் தலைவர் இம்ரான் கான் வெளியிட்டார். அதில், வாக்காளர்களைக் கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக, ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், 50 லட்சம் வீடுகள் மலிவு விலையில் ஏழைகளுக்கு கட்டித் தரப்படும் என்றும் இம்ரான் கான் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, காவல் துறைக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கப் போவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் தலையீடு இன்றி காவல் துறையினர் சுதந்திரமாகப் பணியாற்றும் சூழல் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், முறைகேடுகள் மற்றும் ஊழல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமைப்பு உருவாக்கப்படும் என்றும், அதன் வாயிலாக பாரபட்சமற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் மற்றும் பிரதான எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை ஏற்கெனவே தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து