சீன பொருட்களுக்கான வரியை உயர்த்த அதிபர் டிரம்ப் முடிவு

புதன்கிழமை, 11 ஜூலை 2018      உலகம்
Trump-2018 06 21

வாஷிங்டன், உணவு , கனிமம் உட்பட 6,000-க்கும் மேற்பட்ட சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் 200 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்களுக்கு 10 சதவீதம் வரி உயர்த்தப் போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கடந்த சில நாட்களாக வரத்தக போரில் ஈடுபட்டுள்ளனர். முதலில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்கா வரி விகித்தது. அதற்கு பதிலடி தரும் வகையில் சீனாவும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பதாக அறிவித்தது. இருநாடுகளும் 34 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்களுக்கு வரி விதித்தனர். இதன்மூலம் இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக போர் நேரடியாக தொடங்கியது.

இந்நிலையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் 200 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்களுக்கு 10 சதவீதம் வரி உயர்த்தப் போவதாக டிரம்ப எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த பட்டியலில் உணவு , கனிமம் உட்பட 6,000-க்கும் மேற்பட்ட பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

இது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க ஆகஸ்டு மாதம் கடைசி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, இந்த வரி விதிப்பு அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது. சீனாவின் நியாயமற்ற வர்த்தக செயல்பாட்டின் எதிர்வினை தான் இந்த வரி விதிப்புக்கு காரணம் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து