மருத்துவமனையின் அலட்சியம் தாயின் பிணத்தை மோட்டார் சைக்கிளில் சுமந்து வந்த மகன்

புதன்கிழமை, 11 ஜூலை 2018      இந்தியா
hospital  negligence 2018 7 11

திகம்கார் : மத்திய பிரதேசத்தில் அமரர் ஊர்தி அனுப்ப மறுத்த மருத்துவமனையின் அலட்சியத்தின் காரணமாக, தனது தாயின் பிணத்தை மகன் மோட்டார் சைக்கிளில் சுமந்து வந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

மத்திய பிரதேசத்தின் மோகன்கர் மாவட்டத்தில் உள்ள திகம்கார் என்ற ஊரைச் சேர்ந்தவர் குன்வர் பாய். பாம்பு கடித்ததன் காரணமாக  இவர் மரணமடைந்தார். பிரேத பரிசோதனை செய்வதற்காக மோகன்கர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு குன்வர் பாய் குடும்பத்தினர் தகவல் அளித்தனர். ஆனால் மருத்துவமனை தரப்பிலிருந்து அமரர் ஊர்தி அனுப்ப இயலாது என்று மறுத்து விட்டதாகத் தெரிகிறது.

இதன் காரணமாக வேறுவழியில்லாத குன்வர் பாயின் மகன் தனது தாயின் பிணத்தினை மோட்டார் சைக்கிள் ஒன்றில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். இது தொடர்பான விடியோவானது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து