மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் நிர்மலா தேவி - கருப்பசாமிக்கு தொடர்பு ஐகோர்ட் கிளையில் ஆதாரம் சமர்ப்பிப்பு

புதன்கிழமை, 11 ஜூலை 2018      தமிழகம்
nirmala devi 2018 04 16

மதுரை : பேராசிரியை நிர்மலா தேவிக்கும் மாணவர் கருப்பசாமிக்கும் இடையே தொடர்பு இருந்ததற்கான ஆதாரத்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் மதுரை ஐகோர்ட் கிளையில் சமர்ப்பித்துள்ளனர்.

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முற்பட்டதாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியின் தொலைபேசி ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொலைபேசி ஆடியோவில் இருப்பது அவரது குரல்தானா என்பதை ஆய்வு செய்யும் வகையில் அண்மையில் குரல் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் தொலைபேசி உரையாடலில் இருப்பது நிர்மலா தேவியின் குரல்தான் என்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து நிர்மலா தேவியும் அது தனது குரல்தான் என ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில் பேராசிரியை நிர்மலா தேவிக்கும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி இடையே தொடர்பு இருந்ததை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் உறுதி செய்துள்ளது. இருவரும் தொலைபேசியில் பேசிக்கொண்ட ஆதாரங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசாசர் ஐகோர்ட் மதுரை கிளையில் சமர்ப்பித்துள்ளனர். நிர்மலா தேவியுடன் கருப்பசாமிக்கு கூட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதால் கருப்பசாமிக்கு ஜாமீன் வழங்க கூடாது என சி.பி.சி.ஐ.டி. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து