நீட் தேர்வு விவகாரத்தில் சி.பி.எஸ்.இ. முடிவை பொறுத்து அரசு நடவடிக்கை - அமைச்சர்கள் விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் பேட்டி

புதன்கிழமை, 11 ஜூலை 2018      தமிழகம்
vijaya-bhaskar 2017 6 3

சென்னை : நீட் தேர்வு விவகாரத்தில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து சி.பி.எஸ்.சி. எடுக்கும் முடிவை பொறுத்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அமைச்சர்கள் விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் ஆகியோர் தெரிவித்தனர்.

விழிப்புணர்வு...

உலக மக்கள் தொகை தினம் சார்பாக விழிப்புணர்வு பேரணி சென்னை பெசண்ட் நகர் எலியாட்ஸ் கடற்கரை சாலையில் நடைபெற்றது. இந்த பேரணியை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவருடன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்த்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.  அப்போது அவர் கூறுகையில்,
மக்கள் தொகை 2000ல் 24 சதவீதமாக இருந்தது. ஆனால் படிப்படியாக குறைந்து தற்போது 7.2 சதவீதமாக ஆக குறைக்கப்பட்டுள்ளது.  மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கம். நீட் தேர்வில் அரசு மாணவர்களுக்கு சாதகமாகத்தான் செயல்படும் என்று தெரிவித்தார்.
உறுதியாக உள்ளது...

தமிழில் ஏற்பட்ட பிழையான கேள்விகளுக்காக அதிக மதிப்பெண்கள் வழங்க நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்புப் பற்றி அந்த நகல் இன்னும் கிடைக்கபெறவில்லை என்றும் இதில் சி.பி.எஸ்.இ. எடுக்கும் நடவடிக்கை பொறுத்து தான் அரசு சார்பிலும் நடவடிக்கை இருக்கும் எனவும் கூறினார். மேலும் நீட் எதிர்ப்பு கொள்கையில் அரசு உறுதியாக தான் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தின் ஆலோசனை படி கலந்தாய்வு நடத்தப்பட்டது என்றும் சி.பி.எஸ்.சி முடிவை பொருத்து அரசின் நிலை இருக்கும் எனவும் அவர் கூறினார்..

அமைச்சர் பேட்டி...

இதற்கிடையே அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு சட்டப்படிப்புக்கான கலந்தாய்வை தொடங்கி வைத்த அமைச்சர் சண்முகம். நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் 196 மதிப்பெண் வழங்க வேண்டும் என தீர்ப்பின் நகல் வந்ததும் சி.பி.எஸ்.சி. எடுக்கும் நடவடிக்கையை பொறுத்து அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.

சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து