பொறியியல் படிப்பில் சேர சிறப்பு பிரிவினருக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு

புதன்கிழமை, 11 ஜூலை 2018      தமிழகம்
engineer counselling 2017 6 4

சென்னை : பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விளையாட்டு, முன்னாள் ராணுவத்தினர் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான 2ம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது.

இது குறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் ரெய்மெண்ட் உத்தரியராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சிறப்பு பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் முன்னாள் ராணுவத்தினரின் மகன், மகளுக்கான இட ஒதுக்கீட்டிற்கும், விளையாட்டு வீரர்களுக்குமான 2 ம் கட்ட கலந்தாய்வு அண்ணா பல்கலைக கழகத்தில் நடைபெறுகிறது. முன்னாள் ராணுவத்தினரின் மகள்,மகனுக்கு வரும் 16-ம் தேதியும், விளையாட்டு வீரர்களுக்கான இடங்களுக்கு 17-ம் தேதியும் கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து