முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

புதன்கிழமை, 11 ஜூலை 2018      விளையாட்டு
indian team 2018 6 23

நாட்டிங்காம் : இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரில் முதல் ஆட்டம் நாட்டிங்காமில் இன்று நடக்கிறது.

டி-20 தொடரை...

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரில் முதல் ஆட்டம் நாட்டிங் காமில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. 20 ஓவர் தொடரை வென்றது போல் ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் ஆர்வத்தில் இந்திய அணி உள்ளது.

‘ஒயிட்வாஷ்’...

கடைசியாக 2014-ம் ஆண்டு டோனி தலைமையிலான அணி இங்கிலாந்தில் விளையாடிய போது 5 போட்டிகொண்ட ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இதேபோல தற்போதைய இந்திய அணியும் முத்திரை பதிக்கும் ஆர்வத்துடன் உள்ளது. இங்கிலாந்து அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி ‘ஒயிட்வாஷ்’ செய்து இருந்தது. இதனால் இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது இந்தியாவுக்கு சவாலாக இருக்கும்.

சாஹல்- குல்தீப்...

யசுவேந்திர சாஹல்- குல்தீப் யாதவின் பந்துவீச்சை பொறுத்து அணியின் நிலை இருக்கிறது. இருவரும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள். இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அவர்கள் சவாலாக இருப்பார்கள்.

பேட்டிங் ஆர்டர்...

பேட்டிங்கில் கேப்டன் கோலி, ரோகித்சர்மா, டோனி, ஹர்த்திக் பாண்ட்யா, ராகுல் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். 20 ஓவர் தொடரில் வாய்ப்பு கிடைக்காத தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஒருநாள் தொடரிலாவது இடம் பெறுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

97-வது போட்டி...

20 ஓவர் தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்துடன் இங்கிலாந்து உள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இருந்ததால் நம்பிக்கையுடன் திகழ்கிறது. இரு அணிகளும் இன்று மோதுவது 97-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 96 ஆட்டத்தில் இந்தியா-52-ல், இங்கிலாந்து-39-ல் வெற்றி பெற்றுள்ளன. 2

ஆட்டம் ‘டை’ ஆனது. 3 போட்டி முடிவு இல்லை.

இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. சோனி சிக்ஸ் டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்திய வீரர்கள்:

விராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, தவான், ரெய்னா, டோனி, ராகுல், ஷிரேயாஸ் அய்யர், தினேஷ்கார்த்திக், ஹர்த்திக் பாண்ட்யா, அக்‌ஷர் படேல், யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், சித்தார்த் கவூல், புவனேஷ்வர்குமார், ‌ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ்.

இங்கிலாந்து வீரர்கள்:

மார்கன் (கேப்டன்), ஜேசன்ராய், பட்லர், மொய்ன்அலி, பேர்ஸ்டோவ், அலெக்ஸ் ஹால்ஸ், ஜோரூட், பென்ஸ்டோகஸ், ஜேக்பால், டாம் குர்ரான், புளுன்கெட், ஆதில்ரஷீத், டேவிட் வில்லி, மார்க்வுட்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து