உலகக்கோப்பை கால்பந்து போட்டி: 'கோல்டன் கிளவ்' விருது யாருக்கு ?

புதன்கிழமை, 11 ஜூலை 2018      விளையாட்டு
 Golden Glove  Award 2018 7 11

மாஸ்கோ : ரஷ்யாவில் 21-வது பிஃபா கால்பந்தாட்டப் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரில் அரையிறுதிப் போட்டிகள் தொடங்கியது முதல் போட்டியில் பிரான்ஸ் அணி பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

"கோல்டன் கிளவ்"....

உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில், இப்போது விருதுக்கான இறுதிப் பட்டியலும் வேகமாக தயார் செய்யப்பட்டு வருகிறது. கோல் கீப்பர்களை கெளவரவிக்கும் வகையில்தான் ஒவ்வொரு உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியின் இறுதியில் "கோல்டன் கிளவ்" விருது வழங்கப்படுகிறது.

1994-ம் ஆண்டு அறிமுகம்

ஒவ்வொரு அணியின் வெற்றி தோல்வியை முடிவு செய்வதே அந்ததந்த அணியின் கோல் கீப்பர்கள்தான். எனவே, கோல்டன் கிளவ் விருது முதலாவது உலகக் கோப்பை தொடரில் இருந்தே கொடுக்கப்பட்டு வருகிறது. சோவியத் யூனியனின் மறைந்த கோல் கீப்பர் லீவ் யசின் அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக 1994-ம் ஆண்டு சிறந்த கோல் கீப்பர்களுக்கான யசின் விருது அறிமுகப்படுத்தப்பட்டது.

பெயர் மாற்றம்...

ஆனால் 2010-ம் ஆண்டு முதல் இவ்விருது கோல்டன் கிளவ் விருதாக பெயர் மாற்றப்பட்டது. மேலும் சிறந்த கோல் கீப்பர்கள் சிறந்த வீரர்களாகவும் தேர்வு செய்ய தகுதியுடையவர்கள் என்று பிஃபா குழு முடிவு செய்தது. இவ்வாறு 2002 ஆம் ஆண்டு ஜேர்மனி அணியின் ஆலிவர் கான் சிறந்த கோல் கீப்பருக்கான "கோல்டன் கிளவ்" விருதினையும், சிறந்த வீரருக்கான கோல்டன் பால் விருதையும் வாங்கினார்.

பிக்கார்டு-க்கு வாய்ப்பு...

கடந்த 2014 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்தாட்ட சாம்பியனான ஜெர்மனி அணியின் கோல் கீப்பர் ஆக இருந்த மெனுவள் நியோர் கோல்டன் கிளவ் விருதினை வென்றார்.  இந்தாண்டு குரோஷியாவின் சுபாஸிக் அல்லது இங்கிலாந்து அணியின் பிக்கார்டு கோல்டன் கிளவ் விருதினை வெல்லலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

"கோல்டன் கிளவ்" விருது பெற்றவர்கள்:

1) 1994 – மைக்கல் பெருட்ஹொம்மே (பெல்ஜியம்).
2) 1998 – பெபியன் பார்தெஸ் (பிரான்ஸ்).
3) 2002 – ஆலிவர் கான் (ஜேர்மனி).
4) 2006 – கியன்லூகி புபன் (இத்தாலி).
5) 2010 – ஐகர் கஸில்லாஸ் (ஸ்பெயின்).
6) 2014 – மெனுவள் தியோர் (ஜேர்மனி).

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து