முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.400 கோடி செலவில் தாய்லாந்து குகை சிறுவர்கள் மீட்பு சம்பவம் சினிமாவாகிறது

வியாழக்கிழமை, 12 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

மணிலா: உலகை மெய்சிலிர்க்க வைத்த தாய்லாந்து குகை சிறுவர்கள் மீட்பு சம்பவம் ரூ.400 கோடி செலவில் விரைவில் திரைப்படமாக உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தாம் லுவாங் குகை...
தாய்லாந்தில் சுமார் 10 கி.மீ. நீளமுள்ள ஆழமான தாம் லுவாங் மலைக்குகைக்கு ஜூன் 23-ம் தேதி சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும், அவர்களது பயிற்சியாளரும் குகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.9 நாள் போராட்டத்துக்குப் பிறகு அவர்கள் இருக்கும் இடம் தெரியவந்தது, இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளின் உதவியுடன் ஆபத்தான மீட்பு நடவடிக்கையின் மூலம் சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.

திரைப்படமாக...
மீட்பு பணியின்போது நீர்மூழ்கி வீரர்  ஒருவர் மரணமடைந்தார். இந்நிலையில், இச்சம்பவம் ஹாலிவுட்டில் திரைப்படமாக  எடுக்கப்பட உள்ளது. பியூர் பிளிக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் எனும் நிறுவனம் இதை திரைப்படமாக எடுக்க உள்ளது. இந்த படத்திற்கு ‘God's Not Dead' என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மிச்செல் ஸ்காட், மீட்பு பணிகள் நடந்த போது அதனை பார்வையிட்டுள்ளார்.

வீர தீரச் செயலாக...
அதன் அடிப்படையிலேயே அவர் இந்தப் படத்தை எடுக்க உள்ளார். இதுதொடர்பாக, அவர் கூறுகையில் ‘உலக அளவில் மிகப்பெரிய வீர தீரச் செயலாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. அங்கு பார்த்தபோது மெய் சிலிர்த்து போனேன். இதுபோன்ற உத்வேகமிக்க செயலை நான் பார்த்ததில்லை. தன்னார்வத்துடன் நடந்த இந்த மீட்பு பணி உலக வரலாற்றில் ஒரு மைல்கல். எனவே தான் இதனை திரைப்படமாக்க முடிவு செய்தோம்’ என தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர் உள்ளிட்டவை இன்னும் முடிவாகவில்லை. இத்திரைப்படம் சுமார் 400 கோடி செலவில் எடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து