முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் சுட்டு கொல்லப்பட்ட இந்திய மாணவரின் உடல் ஐதராபாத் வந்தடைந்தது

வியாழக்கிழமை, 12 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

ஐதராபாத்: அமெரிக்காவில் கொள்ளை முயற்சியில் சுட்டு கொல்லப்பட்ட இந்திய மாணவரின் உடல் தெலுங்கானாவுக்கு வந்தடைந்து உள்ளது.

கொள்ளை முயற்சி...
அமெரிக்காவில் கன்சாஸ் சிட்டியில் உள்ள உணவு விடுதி ஒன்றில் பணிபுரிந்து வந்தவர் சரத் கோப்பு (வயது 25).  இந்திய மாணவரான இவர் தெலுங்கானாவை சேர்ந்தவர். கடந்த வெள்ளி கிழமை விடுதிக்குள் புகுந்த நபரொருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.  இதில் அந்த நபரிடம் இருந்து தப்பியோட முயன்ற கோப்பு துப்பாக்கியால் சுடப்பட்டார்.  இதனை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கோப்பு அங்கு உயிரிழந்து விட்டார்.

துப்பாக்கி சூடு...
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர் விடுதிக்குள் நுழைந்து துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முந்தைய காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றை கன்சாஸ் சிட்டி போலீசார் வெளியிட்டு உள்ளனர்.  சந்தேக நபரை பற்றிய தகவல் அளிப்போருக்கு 10 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசும் வழங்கப்படும் என அறிவித்து உள்ளனர்.

முன்னாள் அமைச்சர்...
இந்த நிலையில், கோப்புவின் உடல் நள்ளிரவில் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. அவரது உடலை கோப்புவின் தந்தை ராம் மோகன் பெற்று கொண்டார்.  கோப்புவின் உடலுக்கு முன்னாள் மத்திய அமைச்சரான பண்டாரு தத்தாத்ரேயா உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து