படகு விபத்தில் சிக்கிய தங்கள் மக்களை மீட்காத தாய்லாந்திற்கு சீனா எதிர்ப்பு

வியாழக்கிழமை, 12 ஜூலை 2018      உலகம்
China president Xi 2017 11 15

பெய்ஜிங்: குகையில் சிக்கிய சிறுவர்களை  வெற்றிகரமாக மீட்ட  தாய்லாந்து அரசுக்கு  உலகமே பாராட்டு தெரிவித்து வரும் வேளையில் வேறு ஒரு நிகழ்வுக்காக அந்நாட்டை சீனா விமர்சித்துள்ளது.

சீன சுற்றுலா பயணிகள்
தாய்லாந்தில் கடந்த வியாழக்கிழமை  புக்கெட் தீவுப் பகுதியில் படகில்  120 சீன சுற்றுலா பயணிகள் சென்ற படகு  கவிழ்ந்ததில் இதில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அவர்களில் பெரும்பாலானோர் சீனர்கள். இன்னும் பலர் மாயமாகியுள்ளனர் அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இதுவே தாய்லாந்து மீதான சீன அரசின்  விமர்சனத்துக்கு காரணமாகியுள்ளது.

செல்ல மாட்டோம்....
தாய்லாந்து அரசின் பொறுப்பற்ற தன்மையினால் இந்தப் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது என சமூக வலைதளங்களில் அந்நாட்டின் நெட்டிசன்களும், சீனா செய்தித்தாள்களும் தாய்லாந்து அரசை விமர்சித்து வருகின்றனர். சீன நெட்டிசன்கள் பலர் "தாய்லாந்து கால்பந்து சிறூவர்கள் மீட்கப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சித்தான் ஆனால் நாங்கள் இனி தாய்லாந்து செல்ல மாட்டோம்” என்று கூறியுள்ளனர்.

எண்ணிக்கை குறையும்...
சீன அரசின் தேசிய பத்திரிகை  கூறும்போது, ”இது ஆத்திரமூட்டும் மற்றும் பொறுப்பற்ற செயல். சுற்றுலா பயணிகளுக்கு போதிய பாதுகாப்பை தாய்லாந்து வழங்கவில்லை” என்றும் கூறியுள்ளது. இந்த நிலையில் புக்கெட் படகு விபத்து சீனா - தாய்லாந்து இரு நாடுகளில்  நட்புறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் சீன சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Vada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து

SANKAGIRI KOTTAI | Sankagiri Hill Fort travel | சங்ககிரி மலை கோட்டை பயணம்

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து