முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவி தலைமையில் மகளிர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்

வியாழக்கிழமை, 12 ஜூலை 2018      தேனி
Image Unavailable

 தேனி,- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வருவாய்த்துறை, காவல்துறை, சமூக நலத்துறை, சுகாதார நலத்துறை மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், மாணவ, மாணவியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்களுக்கு மகளிர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்  இரண்டு நாட்களாக  தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவி முனைவர் கண்ணகி பாக்கியநாதன்   தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர்   ம.பல்லவி பல்தேவ்,   முன்னிலையில் நடைபெற்றது.
 தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவி  தெரிவிக்கையில், தமிழக அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக ஏராளமான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. ஆண் பெண் பாகுபாடின்றி எவ்வித உரிமையும் மறுக்கப்படாமல் அடிப்படை உரிமைகளை பாதுகாத்திடவும், பெண்கள் பணிபுரிகின்ற இடங்களில் பிறரால் ஏற்படும் பாலியல் தொல்லைகளிலிருந்து பாதுகாத்திடவும், திருமணத்திற்கு பின்பு கணவர் அல்லது உறவினர்களினால் ஏற்படும் வரதட்சணை கொடுமையிலிருந்து பெண்களை பாதுகாத்திடவும், பெண்களுக்கு கணவர் அல்லது உறவினர்களால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏற்படும் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாத்திடவும் போதிய கல்வி அறிவு மற்றும் வறுமை போன்ற பல்வேறு காரணங்களால் நடத்தப்படும் குழந்தை திருமணத்தினை தடுத்திடவும், மூத்த குடிமக்களை பாதுகாத்திடவும் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டு சட்ட பாதுகாப்பை வழங்கி உள்ளது.
 பெண் குழந்தைகளின் நல் வாழ்க்கையே சமுதாய மேம்பாட்டிற்கு அடிப்படையாகும். நல்ல சமுதாயம் மேன்மையடைய நல் வழியில் குழந்தைகளை வளர்ப்பது அவசியமாகும். பெற்றோர்களின் பாதுகாப்பில் வளர்கின்ற குழந்தைகள் சமுதாயத்தால் ஏற்படுகின்ற பாலியல் தொந்தரவுகளை பெற்றோர்களிடம் எடுத்துக்கூறி உடனடியாக தீர்வு காண முடிகிறது. ஆதரவு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் பெண் குழந்தைகள் மற்றும் சிறார்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு அலுவலர்கள் மூலம் கண்டறிந்து  பாலியல் வன்முறைகளிலிருந்து குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இம் முகாமில் கலந்து கொண்டுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பள்ளி மாணவ, மாணவியர்களை கொண்டு பொதுமக்களிடையே பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவி முனைவர் கண்ணகி பாக்கியநாதன்  தெரிவித்தார்.
 மேலும், மகளிர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
 இரண்டு நாட்கள் நடைபெற்ற முகாமில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  .வீ.பாஸ்கரன்   தமிழ்நாடு மகளிர் ஆணைய இணை இயக்குநர்   ரேவதி   தமிழ்நாடு மகளிர் ஆணைய உறுப்பினர்கள்   உமா மகேஸ்வரி அவர்கள், திருமதி ஜுலியட் செல்வி  ,   விஜய லட்சுமி ராமமூர்த்தி  , மாவட்ட சமூக நல அலுவலர் (பொ)   ராஜராஜேஸ்வரி அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து