முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துவரிமான் கண்மாய் ரூ.50 லட்சத்தில் புனரமைக்கும் குடிமராமத்து பணி அமைச்சர் செல்லூர்கே.ராஜூ துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 12 ஜூலை 2018      மதுரை
Image Unavailable

மதுரை,- மதுரை துவரிமான் கண்மாய் ரூ.50 லட்சம் செலவில் புனரமைக்கும் குடிமராமத்து பணிகளை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று துவக்கி வைத்தார்.
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துவரிமான் கிராமத்திலுள்ள கண்மாயினை குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணியினை, மாவட்ட  கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜு நேற்று துவக்கி வைத்தார்.
அப்போது அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியதாவது:-
குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் துவரிமான் கண்மாய் தூர்வாரும் பணி துவங்குகிறது.  இதனால் இந்தப்பகுதியிலுள்ள ஆயக்கட்டுகள் அனைத்தும் பாசன பயன்பெறும்.   தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட குடிமராமத்துப்பணியின் கீழாக தமிழகம் முழுவதும் ரூ.328.95 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகின்றன.  இதற்காக ககன்தீப்சிங்பேடி தலைமையில் ஏழு இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இந்தப்பணிகள் அனைத்தையும் அவர்கள் தமிழகம் முழுவதும் சென்று ஆய்வு மேற்கொள்வார்கள். 
           மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை ஏறக்குறைய 65 பணிகளும் ரூ.13.35 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.  குறிப்பாக மேற்குத் தொகுதிக்கு மட்டும் ரூ.1 கோடியே 43 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 5 பணிகள் நடைபெறுகின்றன.  அதில் துவரிமான் கண்மாய் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.  முத்துப்பட்டி கண்மாய் ரூ.13 இலட்சம், மேலக்கால் கண்மாய்க்கு ரூ.90 இலட்சம், முடக்கத்தான் கண்மாய் ரூ.19 இலட்சம், கொண்டமாரி ஓடை கள்ளிக்குடி அணைக்கட்டு ரூ.23 இலட்சம் செலவில் தூர்வாரப்பட உள்ளன.
கொடிமங்கலம் பகுதியில் தடுப்பணை கட்டப்பட உள்ளது.  இந்தத் தடுப்பணையின் மூலமாக குண்டாறு வடிநிலப்பகுதி வரை பயன்பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  அதுமட்டுமின்றி மதுரையின் நிலத்தடி நீர்வளத்திற்கும் பெரிதும் உபயோகமாக இந்தத் தடுப்பணை அமையும்.  துவரிமான் கண்மாய் 40 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் தூர்வாரப்பட உள்ளது.  துவரிமான் கண்மாய்க்கு தண்ணீர் வரக்கூடிய ஒடையின் நீளம் மட்டும் 3,121 மீட்டர்.  இதன் கரைகள் பலப்படுத்தப்படவுள்ளது.  தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி அடிப்படையில் விவசாயக் குடும்பம் என்பதால் தமிழக விவசாயிகள் மீது கூடுதல் அக்கறையுடன் இதனை செயல்படுத்தி வருகிறார்.  மேட்டூர் அணை தூர்வாரப்பட்டு தற்போது மிகச்சிறப்பான முறையில் தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறத.  அதே போன்று வைகை அணையும் உரிய நேரத்தில் தூர்வாரப்படுவதற்கான அறிவிப்பு தமிழக அரசால் வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை (நீர் வள ஆதார அமைப்பு) பெரியாறு வைகை வடிநிலகோட்ட செயற்பொறியாளர் சுப்பிரமணியன் அவர்கள், மதுரை மேற்கு வட்டாட்சியர் பாலாஜி அவர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து