முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொருளாதார வலிமை கொண்ட பெண்கள் சமூக தீமைகளுக்கு எதிரான அரண் - பிரதமர் மோடி பேச்சு

வியாழக்கிழமை, 12 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : பொருளாதார ரீதியாக அதிகாரம் பெற்ற பெண்கள், சமூக தீமைகளின் அரணாக விளங்குவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி, காணொலி காட்சி மூலம் மகளிர் சுய உதவிக் குழுவினருடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-

அளப்பரியது...

பெண்களின் விடாமுயற்சி மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடு எனக்கு மிகுந்த உத்வேகத்தை தந்தது. பெண்கள் தற்போது அனைத்து துறையிலும் குறிப்பாக விவசாயம் மற்றும் பால் பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.  இரண்டு துறைகளும் பெண்கள் இல்லாமல் ஜொலிக்க முடியாது. பெண் தொழில் முனைவோர்களை உருவாக்குவதில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் பங்களிப்பு அளப்பரியது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெண்கள் பொருளாதார விழிப்புணர்வும், வலுவும் அடைய உதவுகிறது.

வேலைவாய்ப்பு...

நிதி சுதந்திரமானது, பெண்களை உறுதியானவர்களாகவும், அதிகாரம் மிக்கவர்களாகவும் உருவாக்குகிறது. நிதி அதிகாரம்மிக்க பெண்கள், சமூக தீமைகளுக்கு எதிரான அரணாகத் திகழ்கிறார்கள். தேசிய கிராமப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள இரண்டரை லட்சம் கிராம பஞ்சாயத்துக்களில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். இது அனைத்து மாநிலங்களிலும் விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து