முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்கள் உயர்ந்த லட்சியத்தை உருவாக்கி கொண்டு அதை அடைய கடுமையாக முயற்சிக்க வேண்டும் ஜி,டி.என். கல்லூரி கல்வி இயக்குனர் அறிவுரை

வெள்ளிக்கிழமை, 13 ஜூலை 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல் - மாணவர்கள் உயர்ந்த லட்சியத்தை உருவாக்கி கொண்டு அதை அடைய கடுமையாக முயற்சிக்க வேண்டும் என ஜி,டி.என். கல்லூரி கல்வி இயக்குனர்  முனைவர் நா.மார்க்கண்டேயன் அறிவுரை வழங்கி பேசினார்.
திண்டுக்கல் ஜி.டி.என்.கலைக்கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியல் துறை சார்பாக காம்ட்ரானிக்ஸ் _கிளப்பின் புதிய உறுப்பினர்கள் அறிமுகம் செய்தல் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜி.டி.என்.கல்லூரி ஜி.எஸ். அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரியின் கல்வி இயக்குனர் முனைவர் மார்க்கண்டேயன் தலைமை வகித்தார். சுயநிதிப் பிரிவின் துணை முதல்வர் நடராஜன், துணைத்தலைவர் ஜெயந்தி, உதவி பேராசிரியர் முனைவர் ஞீபதி, மற்றும் முன்னாள் மாணவர் ஆனந்தவேல் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். இளங்கலை கணினி அறிவியல் துறையின் இறுதியாண்டு பயிலும் மாணவர் அருண்குமார் வரவேற்றார். கல்வி இயக்குனர் மற்றும் துணை முதல்வர் முன்னிலையில் காம்ட்ரானிக்ஸ் கிளப்பின் புதிய உறுப்பினர்களை துறை தலைவர் அறிமுகம் செய்து வைத்தார். இதன்படி தலைவராக குருபிரசாத், உபதலைவராக கமலேஸ்வரி, செயலாளராக மித்ரன் குமார், பொருளாளராக விஜயலெஷ்மி ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
நிகழ்வின் போது கல்வி இயக்குனர் மார்க்கண்டேயன் தெரிவிக்கையில், அனைவரும் உயர்ந்த லட்சியத்தை உருவாக்கிக் கொண்டு அதை அடைய கடுமையாக முயற்சி செய்ய வேண்டும். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நல்ல எண்ணங்களுடன் எழுச்சியுடன் செயலாற்றினால் வெற்றி உறுதி என அறிவுறுத்தி பேசினார்.
துணை முதல்வர் நடராஜன் பேசுகையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் ஆர்வத்துடன் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதற்கு 3 மற்றும் 2ம் ஆண்டு மாணவர்கள், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நல்ல உதாரணமாக நல்வழியில் வழிநடத்துபவர்களாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
பல்கலைக்கழக தரவரிசையில் கடந்த ஆண்டு 3ம் இடத்தைப் பெற்ற மாணவர் ஆனந்தவேல் மற்றும் முன்னாள் மாணவர்கள் பாலாஜி, ரஞ்சித்குமார் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிறைவில் புதிய கிளப்பின் சார்பாக 3ம் ஆண்டு மாணவர்கள், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அறிவுசார்ந்த போட்டிகளை நடத்தியது பயனுள்ளதாக அமைந்தது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். புதிய கிளப்பின் உபதலைவர் கமலேஸ்வரி நிறைவில் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து