முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெற்காசிய சிலம்பம் சாம்பியன் : இந்திய அணி சார்பில் பங்கேற்கும் மாணவர்கள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

வெள்ளிக்கிழமை, 13 ஜூலை 2018      விருதுநகர்
Image Unavailable

சிவகாசி- கன்னியாகுமரியில் இன்று துவங்க உள்ள தெற்காசிய சிலம்பம் சாம்பியன் போட்டியில், இந்தியா அணி சார்பில் விருதுநகர் மாவட்டத்திலிருந்து பங்கேற்கும் மாணவ மாணவிகள் . அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தெற்காசிய சிலம்பம் கூட்டமைப்பின் சார்பில், பல்வேறு நாடுகள் பங்கேற்கும், டபள்யூ.எஸ்.எப்., என்ற, உலக சிலம்பம் கூட்டமைப்பின், இரண்டாவது தெற்காசிய அளவிலான சிலம்பம் சாம்பியன் போட்டி, கன்னியாகுமரி மாவட்டம், சி.எஸ்.ஐ., ஹாலில், இன்று துவங்கி, 15ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில், இந்தியா, பாகிஸ்தான், பூட்டான், நேபாளம் உள்ளிட்ட, எட்டு சர்வதேச நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்க உள்ளனர். மினி சப்-ஜூனியர், சப் - ஜூனியர், ஜூனியர், சீனியர் என, நான்கு பிரிவுகளில், இருபாலருக்கும் போட்டிகள் நடக்கின்றன. இந்த போட்டிகளில் விருதுநகர் மாவட்டத்தில் 37 மாணவர்கள் இந்தியா அணி சார்பில், சீனியர் பிரிவில் போட்டியில் பங்கேற்கின்றனர். இதில் திருத்தங்கல் பகுதியை சேர்ந்த 27 மாணவ மாணவர்கள் நேற்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
படம் விளக்கம், கன்னியாகுமரியில் துவங்க உள்ள தெற்காசிய சிலம்பம் சாம்பியன் போட்டியில் பங்கேற்க உள்ள விருதுநகர் மாணவ மாணவிகள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து