முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: 3-வது இடத்திற்கு பெல்ஜியம் இங்கிலாந்து இன்று மோதல்

வெள்ளிக்கிழமை, 13 ஜூலை 2018      விளையாட்டு
Image Unavailable

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடக்கவுள்ள 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் பெல்ஜியம்- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றனர்.

3-வது இடம் ...
21-வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்த கால்பந்து திருவிழாவின்  இறுதிப்போட்டி வருகிற 15-ம் தேதி நடக்கிறது. இதில் 1998-ம் சாம்பியனான பிரான்ஸ்- குரோஷியா அணிகள் மோதுகின்றன. அதற்கு முன்னதாக 3-வது இடத்துக்கான ஆட்டம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் பெல்ஜியம்- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. எந்த அணி 3-வது இடத்தை வெல்லபோகிறது? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2-வது முறை...
பெல்ஜியம்- இங்கிலாந்து அணிகள் இந்த உலகக்கோப்பையில் மோதுவது இது 2-வது முறையாகும். ‘லீக்’ ஆட்டத்தில் பெல்ஜியம் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று இருந்தது. 16 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே அணிகள் 2-வது முறையாக மோதுகின்றன. 2002-ல் பிரேசில்- துருக்கி அணிகள் 2 தடவை மோதின. இந்தப்போட்டி தொடரில் சிறப்பாக விளையாடிய பெல்ஜியம் அதிர்ஷ்டம் இல்லாமல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. அரை இறுதியில் 0-1 என்ற கணக்கில் பிரான்சிடம் தோற்றது.

முன்னணி வீரர்கள்
பெல்ஜியம் அணி 1986-ல் 4-வது இடத்தை பிடித்தே சிறந்த நிலையாக இருக்கிறது. தற்போது அதில் இருந்து முன்னேற்றம் காண இங்கிலாந்தை வீழ்த்தி 3-வது இடத்தை பிடிக்கும் ஆர்வத்துடன் உள்ளது. பெல்ஜியம் அணியில் ஈடன் ஹசாட், லுகாகு, டுபுரு யன், பெலானி போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர். 1966-ம் ஆண்டு சாம்பியான அந்த அணி இதற்கு முன்பு 1990-ல் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இத்தாலியிடம் தோற்று இருந்தது.

5 ஆட்டம் ‘டிரா’ 
தற்போது அதே மாதிரி நடந்துவிடாமல் இருக்க வெற்றி பெற போராடும். இங்கிலாந்து அணியில் ஹாரிகேன், லிங்கார்டு, ஸ்டெர்லிங் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர். இரு அணிகளும் 21 முறை மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து 15-ல், பெல்ஜியம் 1-ல் வெற்றி பெற்றுள்ளன. 5 ஆட்டம் ‘டிரா’ ஆனது. இங்கிலாந்து அணி அரை இறுதியில் குரோஷியாவிடம் தோற்று இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து