முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் ஒருநாள் போட்டி: ரோஹித் சதத்தால் இந்தியா அபார வெற்றி

வெள்ளிக்கிழமை, 13 ஜூலை 2018      விளையாட்டு
Image Unavailable

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மாவின் அபார சதத்தால், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

பந்துவீச்சு தேர்வு
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா, 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதன், முதல் போட்டில் நாட்டிங்ஹாம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய இங்கிலாந்து அணியில், தொடக்க வீரர்களான ஜேசன் ராய் மற்றும் பியர்ஸ்டா அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 73 ஆக இருந்த போது, ஜேசன் ராயை 38 ரன்களில் வெளியேற்றி சரிவுக்கு வித்திட்டார் குல்தீப் யாதவ்.

268 ரன்களுக்கு...
நடுவரிசையில் இறங்கிய பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் இருவரும் அரைசதத்தை பதிவு செய்தனர். அடுத்தடுத்து, இவர்கள் இருவரையும் ஆட்டமிழக்கச் செய்து மீண்டும் இங்கிலாந்தை ஆட்டம் காண செய்தார் குல்தீப். ஆட்டத்தில் ஒரு பந்து எஞ்சிய நிலையில், இங்கிலாந்து அணி 268 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர், இலக்கை விரட்டிய இந்திய அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவானும் 40 ரன்களில் ஆட்டமிழந்ததும், அடுத்த வந்த கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 18-வது சதத்தை பூர்த்தி செய்தார்.

கோலி 75 ரன்கள்...
விராட் கோலி தனது பங்கிற்கு 75 ரன்கள் விளாசி ரன் உயர்வுக்கு வழிவகுத்தார். இந்தியா 40.1 ஓவரில், 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 269 ரன்கள் சேர்த்து வெற்றிபெற்றது. இதன் மூலம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி, 1-0 என்ற விகிதத்தில் இந்தியா தொடரில் முன்னிலை பெற்றது. ரோஹித் 137 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார்.

குல்தீப் அபாரம்...
இந்தப் போட்டியில், 10 ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து, 6 விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப், ஆட்டநாயகனாக ஜொலித்தார். இங்கிலாந்து, மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில், ஒரு போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் சுழற்பந்து வீரர் என்ற சாதனையை படைத்தார் குல்தீப். இதற்கு முன்பு, முத்தைய முரளிதன் மற்றும் சுராஜ் ரந்தீவ் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்து வந்தது. அத்துடன், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது சிறந்த பந்துவீச்சையும் குல்தீப் பதிவு செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து